சென்னை: மணலியில் இரண்டு வீட்டுக்கு இடையில் அரையடி சந்தில் சிக்கிக்கொண்ட மூதாட்டியை தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடி மீட்டனர்.
சென்னை திருவொற்றியூர் அடுத்த மணலி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பொம்மி (60). திருமணமாகாத அவர், உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று பொம்மியின் உறவினர்கள் அனைவரும் திருப்பதி கோயிலுக்கு சென்றுள்ளனர்.
பொம்மி வீட்டில் தனியாக இருந்த நிலையில், வீடு துடைக்கும் மாப் மொட்டை மாடியில் இருந்து, இரண்டு வீட்டுக்கும் இடையில் உள்ள சந்தில் விழுந்துள்ளது. இதை எடுப்பதற்காக பொம்மி சந்தின் உள்ளே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதமாக உள்ளே சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் கூச்சலிட்டார்.
இதையும் படிக்க: தெலுங்கான சிறப்பு உணவு, சிறப்பு ட்ரோன் நிகழ்ச்சி... உலக அழகிகள் குழுவை வியக்க வைத்த தெலுங்கானா அரசு! |
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றி வெளியே கொண்டுவர முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணலி போலீசார், தீயணைப்பு துறையினர் உதவியுடன் சுமார் 3 மணி நேரம் போராடி பொம்மியை பத்திரமாக மீட்டனர். இதில் அவருக்கு முகம் முதுகு போன்ற இடங்களில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து காயமடைந்த பொம்மியை , சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.