ETV Bharat / state

பாஜக புதிய மாநில தலைவர் யார்? விதிமுறைகளால் அதிர்ச்சி அடைந்த தலைவர்கள்! - BJP STATE PRESIDENT ELECTION

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று பாஜக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பாஜக அலுவலகம்
தமிழ்நாடு பாஜக அலுவலகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 10, 2025 at 5:08 PM IST

2 Min Read

சென்னை: தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் நாளை விருப்ப மனு அளிக்கலாம் என்று அக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக உலா வருகின்றன. இதனை உறுதி செய்யும் வகையில் மாநிலத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் நாளை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று பாஜக தலைமை அறிவித்துள்ளது. மாநில தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக தற்போதைய மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில தலைவர் தேர்தல் குறித்து சக்கரவர்த்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவின் அமைப்பு தேர்தல் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. கிளைகள் முதல் மாவட்ட தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரை தேர்தல் முடிவடைந்து உள்ளது. புதியவர்கள் பலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது இறுதியாக மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்காக விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்தலுக்கான விருப்ப மனுக்களை கட்சியின் www.bjptn.com என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை (11.04.2025) வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் படிவம் எஃப்-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: நீட் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக - 'எஜமான விசுவாசம்' என திமுக விமர்சனம்!

மூன்று பருவ காலகட்டத்தில் தீவிர உறுப்பினராகவும், குறைந்தது பத்து ஆண்டுகள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவர். மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடுவோர், மாநில செயற்குழு உறுப்பினர்கள் 10 பேரிடம் இருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைகளை சமர்பிக்க வேண்டும்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விரும்புவோர், படிவம் இ பூர்த்தி செய்ய வேண்டும். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் முன் மொழிவுடன் மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிதலுடன் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும்,"என்று கூறியுள்ளார்.

மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவோர் குறைந்தது பத்து ஆண்டுகளாவது அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதிமுறை காரணமாக தற்போது இருக்கும் நிர்வாகிகளில் பலர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட முடியாதசூழல் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.