ETV Bharat / state

திருநெல்வேலி ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் பிராந்திய மையம்! தொடங்கியது ஆய்வு பணிகள் - Disaster Recovery Centre nellai

Nellai Disaster Recovery Center: தேசிய பேரிடர் மீட்பு குழுவின் பிராந்திய மையம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் அமைய உள்ள நிலையில், 30 பேர் கொண்ட இக்குழுவின் ஆய்வுப் பணிகள் இன்று துவங்கி உள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2024, 7:53 PM IST

நெல்லை ராதாபுரம்,  தேசிய பேரிடர் மீட்பு குழுவின் பிராந்திய மையம்
நெல்லை ராதாபுரம், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் பிராந்திய மையம் (Credits- ETV Bharat Tamil Nadu)

திருநெல்வேலி: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள மாநில பேரிடர் சவால்களை எதிர் கொள்ளும் வகையில் மண்டல தேசிய பேரிடர் மையம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 18 இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை இன் கீழ் தேசிய பேரிடர் மையம் செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் அரக்கோணத்தில் இந்த மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் பேரிடர் சமயங்களில் இந்த குழுவினர் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மண்டலத்தின் கீழ் கேரள மாநிலம் திருச்சூரிலும், அந்தமான் நிக்கோபார் தீவிலும், சென்னையிலும், மண்டல தேசிய பேரிடர் மீட்பு படையின் மண்டலம் செயல்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: வெடிக்கும் இமயமலை பனிப்பாறை ஏரிகள்..பெருக்கெடுக்கும் வெள்ளம்... தடுக்க என்ன வழி?

இதன் ஒரு கட்டமாக தற்பொழுது 4வது இடமாக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு பிரிவு அமையப்பட உள்ளது. இதில் 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் குழு பிராந்திய மையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும். மேலும் அதி நவீன மீட்பு உபகரணங்கள், தொலை தொடர்பு சாதனங்களுடன் மண்டல மையம் செயல்பட உள்ளது.

இரசாயனம், கதிரியக்கம் மற்றும் உயிரியல் சார்ந்த பேரிடர்களை எதிர் கொள்ளும் வகையில் உபகரணங்களும் மண்டல மையத்தில் இடம்பெறுகிறது. ராதாபுரம் மாணவர்கள் தங்கும் விடுதியில் தற்காலிகமாக பிராந்திய குழு செயல்பட உள்ளது.
நிரந்தரமாக தேசிய பேரிடர் மையம் அமைவதற்கு வள்ளியூர் மற்றும் ராதாபுரம் பகுதிகளில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்னும் இரு தினங்களில் நெல்லையில் இந்த மையம் செயல்பட துவங்க உள்ளது. இதற்காக தேசிய பேரிடர் குழு வீரர்கள் 30 பேர் இன்று நெல்லை வருகை தந்துள்ளனர். அரக்கோணத்துக்கு அடுத்த படி தேசிய பேரிடர் மீட்பு மையம் நெல்லை மாவட்டத்தில் செயல்பட இருப்பது தென் தமிழக மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். குறிப்பாக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் அடிக்கடி வெள்ள பாதுப்பு ஏற்படும் சூழலில் தேசிய பேரிடர் மையம் பெரும் உதவியாக இருக்கும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.