ETV Bharat / state

''என்னோட ஸ்டைல் வேற மாதிரி'' - புதிர் போடும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்! - BJP TN PRESIDENT NAINAR NAGENDRAN

அதிமுகவில் டிடிவி தினகரனால்தான் அனைவரும் பதவி பெற்றனர். இதை யாராலும் மறுக்க முடியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 14, 2025 at 9:50 AM IST

4 Min Read

திருநெல்வேலி: ஒரு நாள் அரசியல் போராட்டம் எல்லாம் மக்களிம் எடுபடாது. என்னோட ஸ்டைல் வேற மாதிரி இருக்கும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடிக்கு நேற்று மாலை வந்தடைந்தார் அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலி வந்த நிலையில் கேடிசி நகர் பகுதியில் மாவட்ட பாஜக சார்பில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நெல்லை பாஜக அலுவலகத்துக்கு நேற்று சென்ற நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், அண்ணாமலையால் பாஜக மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அண்ணாமலைக்கு பாஜகவினர் மட்டுமல்லாது இளைஞர்களும் பொதுமக்களும் ரசிகர்களாக உள்ளனர்.

போதை பழக்கமே மூலகாரணம்: திமுக ஆட்சி மக்களிடத்தில் அதிக விரோதத்தை சம்பாதித்துள்ளது. சொத்துவரி ஐந்து மடங்கும், மின் கட்டணம் அதிகமான அளவும் உயர்ந்துள்ளது. தமிழக இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். முதலமைச்சர் தம் வசம் உள்ள காவல்துறையை கட்டுபாட்டுடன் வைத்திருக்கவேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசம் காவல்துறை இருந்தபோது ஸ்காட்லாண்ட்டுக்கு இணையான புகழோடு தமிழக காவல்துறை இருந்தது. தமிழக காவல்துறை இப்போது முறையாக எந்த பணியையும் செய்யாமல் இருக்கிறது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை போன்ற தீய விஷயங்கள் அனைத்துக்கும் போதைபொருள் புழக்கம் அதிகரித்துள்ளதான் காரணம். டாஸ்மாக்கில் 19 ஆயிரம் கோடி ஊழல், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் போன்றவற்றால் தமிழக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு மூலம் ரேசன் கடைகளுக்கு கொடுக்கும் பொருட்கள் அனைத்தையும் மாநில அரசே கொடுத்ததாக திமுகவினர் சொல்லி வருகின்றனர். மக்களுக்கு தேவையான எதனையும் எந்த பொருளையும் மாநில அரசு கொடுக்கவில்லை எந்த நன்மையையும் மக்களுக்கு செய்யவில்லை. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா தற்போதைய அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பெண்களை தரக்குறைவாக பேசியுள்ளனர். தர குறைவாக பேசிய திமுகவினருக்கு பெண்கள் வாக்களிக்கும் சூழ்நிலை 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வரக்கூடாது. மத்தியில் ஊழல் இல்லாத பாஜக அரசைப் போல மாநிலத்திலும் நேர்மையான அரசு வரவேண்டும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு விஷயத்திற்காக ஒரு நாள் மட்டும் போராட்டத்தை நடத்தி விட்டு செல்வது வெறும் அரசியல் ஆகிவிடும். ஒரு பிரச்சனையை வீடு வீடாக கொண்டு சென்று அதற்கான தீர்வை கொண்டு வருவதே எனது நோக்கம். போராட்டம் நடத்துவதன் மூலம் எந்த ஒரு தீர்வையும் யாராலும் கொடுக்க முடியாது. எனது பாணியில் அமைதியான முறையில் ஒரு பிரச்னையை பொதுமக்கள் மத்தியில் கொண்டு சென்று உரிய தீர்வை அவர்களிடம் பெற்று தருவேன்.

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்: சட்டமன்ற கூட்டத்தொடரில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது நாங்கள் வேண்டாம் என்று வழிநடப்பு செய்தோம். மும்மொழி கொள்கை வேண்டும் என்றார்கள். நாங்கள் வேண்டாம் என்று வெளியேறினோம். ஒத்து வராத கொள்கைக்கு எங்களது எதிர்ப்பை கட்டாயம் தெரிவிப்போம். சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதலமைச்சர் செய்ய வேண்டிய அனைத்து திட்டங்களையும் அவரை சந்தித்து நேரடியாக கேட்டு பெறுவது எனது கடமை. தொகுதிக்கு வந்து முதலமைச்சர் பல அறிவிப்புகளை செய்ததன் காரணமாக தமிழ் பண்பாட்டின் அடிப்படையில் அவருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டேன். சிறுபான்மையினர்களுக்காக நெல்லை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை நான் அமைச்சராக இருக்கும் போது கொண்டு வந்துள்ளேன் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்போது அனைத்து ஊர்களிலும் கேந்திர வித்யாலயா பள்ளிகள் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கான முழு முயற்சியும் எடுக்கப்படும்.

இதையும் படிங்க: “இஸ்லாமியர்களை வன்முறை பக்கம் தள்ளுவதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டம்”- மஜக தலைவர் காட்டம்!

இன்று வரை எனது செல்போனில் உள்ள காலர் டியூனாக எம்ஜிஆர் பாடல் தான் வைத்திருக்கின்றேன். டிடிவி தினகரன் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் என்னை சந்தித்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரை பார்த்து தான் அதிமுகவில் உள்ள அனைவரும் பதவி வாங்கினார்கள். அதனை யாரும் மறுக்க முடியாது. கடந்து வந்த பாதையை ஒரு நாளும் மறக்க மாட்டேன். அதனை மறக்கவும் கூடாது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் நீட் தேர்வு எதிர்ப்பு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுக இரட்டை வேடம் போட்டு வருகிறது இரண்டு முறை நீட் தேர்வு வேண்டாம் என சட்டமன்றத்தில் தீர்மானம் வைத்து குடியரசுத் தலைவரை வரை சென்று நிராகரிக்கப்பட்டுள்ளது. நடக்காத விஷயத்தை நடத்துவேன் என்று திமுக சொல்வது அரசியல் செய்வதாக உள்ளது கச்சத்தீவு விவகாரம் சர்வதேச பிரச்சனை இரண்டு மாநிலங்களுக்குள்ளே இருக்கும் பிரச்சனை கிடையாது தமிழக முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்தபோதே கச்சத்தீவு இலங்கையிடம் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது சட்டமன்றத்தில் பேசும் அமைச்சர் துரைமுருகன் எங்களுக்கு கச்சத்தீவை கொடுத்தது தெரியாது என பொய் சொல்கிறார்.

பொது செயல் திட்டம்: திமுகவை வீட்டுக்கு அனுப்புவதை மட்டுமே எங்களது முழு வேலையாகக் கொண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. கொள்கையளவில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே பல்வேறு மாறுபாடுகள் இருக்கலாம். அதனை சரி செய்வதற்கு குறைந்த பட்ச பொது செயல் திட்டம் தீட்டி அதனை ஆட்சி அமைக்கும் போது ஆலோசனை செய்து முடிவு எடுப்போம். யார் முதல்வராக வேண்டும்? யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

வக்பு சட்டம் தேவை இல்லை என்பதை வலியுறுத்தி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது தவெக தலைவர் நடிகர் விஜயின் விருப்பம். ஆனால் அது தேவையில்லாத ஒரு செயல். ஒரு சட்டம் வேண்டும் வேண்டாம் என்று சொல்வது ஒரு கட்சியின் தலைவராக விஜய் எடுத்த கொள்கை முடிவு ஆகும். அதன் அடிப்படையில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். பாஜக தேசிய கட்சி என்பதால் தேர்தலில் யார் போட்டியிடுவார்கள் போட்டியிட மாட்டார்கள் என்பதை பாஜகவின் நாடாளுமன்ற குழுதான் கூடி முடிவு செய்யும். எங்களது விருப்பத்தை மட்டுமே தமிழகத்தின் சார்பில் நாங்கள் தெரிவிப்போம். வேட்பாளர்களை அறிவிப்பது தேசிய தலைமைதான். எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சியின் உறுப்பினராக இருந்தபோது நாங்கள் ஒன்றாக பணி செய்துள்ளோம் நட்பின் அடிப்படையில் அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயமாக அது நடந்துள்ளது," என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.