ETV Bharat / state

"நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் 'திராவிடர்கள்' தான்" - ஆ.ராசா நெருப்பான பேச்சு! - MP A RAJA

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆளுநருக்கு எதிராக கூட்டாட்சி தத்துவத்தை நிரூபித்திருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் என்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசினார்.

ஆ.ராசா பேச்சு
ஆ.ராசா பேச்சு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 15, 2025 at 8:51 PM IST

2 Min Read

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை சார்பில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் குறித்த கருத்தரங்கில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்துகொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின் அதிகாரங்கள் குறித்து மக்களுக்கு தெரியாத காலத்திலேயே சட்டத்தை கட்டமைத்தவர் அம்பேத்கர். அம்பேத்கரின் அறிவாற்றலையும், அவரின் ஆளுமையையும் குறைப்பதற்காகவே சாதி என்ற கட்டமைப்புக்குள் அவரை வைக்கின்றனர். அம்பேத்கர் ஒரு தலித்திய உரிமைக்காக குரல் கொடுத்தவர் என்பது மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. அம்பேத்கருக்கு பல பரிமாணங்கள் உண்டு. அவர் குறித்த ஒரு விமர்சனத்திற்கு, '' நான் வெளிநாட்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் முடித்திருக்கின்றேன், என்னை சீண்டாதீர்கள்'' என்றார். அதன் பின்பாக காரல் மார்க்ஸ் மற்றும் புத்தாவை இணைத்து சமூக ஏற்ற இறக்கங்களை ஒப்பிட்டு, பொருளாதாரம் குறித்து பேசினார். அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, அரசியலமைப்பு என அனைத்து பரிணாமங்களிலும் பரந்த அறிவை பெற்றிருந்த அம்பேத்கரை யாருடனும் ஒப்பிட முடியாது.

அரசியலமைப்பை படிப்பதற்கு முன்பாக, அரசியலமைப்பு பேரவை கூட்டத்தொடரில் அம்பேத்கர் முன்வைத்த பலமான விவாதங்களை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய கொடியில் அசோக சக்கரம்

சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் கொடி தான் இந்திய நாட்டின் தேசியக்கொடியாக இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். அம்பேத்கர் அதை மறுத்தார். காரணம் அதில் இருக்கக்கூடிய ராட்டை நிரந்தரமாக தொழில் புரட்சியாக இருக்காது என்றார். இன்று நாம் மாட்டு வண்டியில் செல்கின்றோம், நாளை அவைமுற்றிலுமாக ஒழிந்து போகலாம். ஆனால் நீங்கள் நிரந்தரமாக ராட்டையை தேசியக் கொடியில் வைத்தால் உலக நாடுகள் நம்மை பார்த்து சிரிப்பார்கள் என்றார். நாட்டில் மதத்தால், இனத்தால், சாதியால், வர்ணாசிரமத்தால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடந்த இந்த இந்திய நிலப்பரப்பை அசோகர் ஆட்சியில் புத்த மதம் முழுமையாக சமப்படுத்தியது. அவர் உருவாக்கிய அசோக சக்கரம் அது தினமும் மாறும் என்பதை நினைவூட்டும் என்றார். அதனடிப்படையில் அசோகச் சக்கரம் இடம்பெற்றது.

தேசியக் கொடி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது டாக்டர் ராதாகிருஷ்ணன், அசோகரின் ஆட்சிக்காலம் என்பது சர்வதேச அளவில் தூதர்களை அனுப்பி சர்வதேச நாடுகளின் தொடர்பை ஏற்படுத்தியதாகவும், அசோகச் சக்கரம் சட்டத்தையும் தர்மத்தையும் குறிப்பிடுவதாக கூறினார்.

ராட்டை இல்லாத தேசிய கொடியை வணங்க மாட்டேன் என காந்தி கூறினார். ஆனால் அவர் இறந்த பின்பாக அவருடன் மீது தேசியக்கொடி தான் போர்த்தப்பட்டது. இது ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

பாகிஸ்தான் ஒரு மத சார்புள்ள நாடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்ற மதத்தினர் என அனைவரும் இந்தனர். 6,000 மொழிகளுக்கு மேல் இருந்தது. ஆயிரம் சாதிகளுக்கு மேல் இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு விதமான உணவு, உடை, கலாச்சாரம் இருந்தது. அதனாலேயே நேரு மற்றும் அம்பேத்கர் கூறினார்கள், இது தனிப்பட்ட நாடு அல்ல அனைத்து மக்களும் ஒருங்கிணைந்த ஒரு துணை கண்டம் என கூறினர்.

'உண்மையான உரிமையாளர்கள்'

இந்த மொத்த நாடும் திராவிட நாடாக இருந்தது. ஆரியர்கள் வந்த பின்பாக கொஞ்சம் கொஞ்சமாக திராவிடர்கள் தெற்கு பகுதிக்கு தள்ளப்பட்டனர். இப்போதும் தெற்கு திராவிடமாக உள்ளது. இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் திராவிடர்கள் தான். இது பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், கூறியது அல்ல. அம்பேத்கரின்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. திராவிட ஐடியாலஜி அம்பேத்கரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தேசியக் கொடியிலிருந்து, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது வரை ஒவ்வொரு பகுதிகளும் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது. தற்போதுள்ள பாஜக அரசுக்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவருவது மிகவும் எளிதாகிவிட்டது. மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு மாற்றங்கள் செய்கின்றார்கள் இது ஜனநாயகம் அல்ல.'' என ஆ.ராசா தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.