ETV Bharat / state

துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்துக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி! - MHC STAY STATE AMENDMENT

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்கும் சட்டத்துக்கு சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 21, 2025 at 8:21 PM IST

4 Min Read

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல்: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரின் வசம் இருந்தது. இந்த நியமன அதிகாரத்தை மாநில அரசுக்கே மாற்றி வழிவகை செய்யும் மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. ஆனால், அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கவில்லை. மேலும் சில மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை.

இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ள சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்திம் தமிழ்நாடு அரசு வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்க, சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம், ஒப்புதல் அளித்தது.

அதன் அடிப்படையில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டங்களை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்கால தடை கோரிய மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தது.

வானம் இடிந்து விடாது: இன்றைக்கு இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "தமிழக அரசின் சட்டங்களுக்கு தடை கோரிய மனுவுக்கு பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும். சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதுவும், ஜூன் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது. அதனால் தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும்,"என வாதிட்டார்.

தமிழக உயர்கல்வித் துறையின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "துணைவேந்தர் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் எழவில்லை. பாஜகவை சேர்ந்த மனுதாரர், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். தடை கோரிய மனுக்களுக்கு பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. உடனே விசாரிக்காவிட்டால் வானம் இடிந்து விழுந்து விடாது," என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்து வாதிட்டார்.

தமிழகத்தின் சட்டம் மேலானது: மனுதாரர் தரப்பில் இடைக்கால தடை கோரிய மனு மீது வாதங்களை முன் வைக்க நீதிபதிகள் அனுமதியளித்ததை அடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,"பல்கலைக் கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர்களை நியமிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுவிட்டது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுக்கு முரணாக தமிழக அரசு சட்டம் இயற்றப்பட்டுள்ளது,"என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "இந்த சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேடுதல் குழு நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை விட தமிழக அரசின் சட்டம் மேலானது.

இதையும் படிங்க: ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறியது யார்? எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறாத நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் குறித்த விதிகளை ஏற்க மறுத்து 2021ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு சட்டங்கள் சட்டவிரோதமானதல்ல. யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது. விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய 2 வாரகால அவகாசம் வழங்க வேண்டும். பிரதான சட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை நியமிக்க கூறவில்லை. தற்போதைய சட்டத்தில்கூட, வேந்தர் என்பதற்கு பதிலாக அரசு என்ற திருத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது,"என விரிவாக வாதிட்டார்.

ஆளுநர் வேந்தராகத் தொடர்கிறார்: உயர்கல்வித் துறை செயலாளர் சார்பில் ஆஜரான ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "வாதங்களை முன்வைக்க அவகாசம் அளிக்க வேண்டும். விசாரணையை நாளைக்கு ஒத்திவைக்க வேண்டும்,"என்றார்.

ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைக்க முடியாது என்று கூறினர்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் வில்சன், "இடைக்கால தடை கோரிய மனுவை விசாரித்தால், வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகி விடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. நாளை இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். தேடுதல் குழு நியமனத்தை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிர்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தர் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டதாகும். உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி வந்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்த காரணங்களும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை,"என வாதிட்டார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், "தமிழக அரசின் சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது," என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.