ETV Bharat / state

"செயினை சொம்புக்குள் போட்டா குழந்தை பிறக்கும்" சென்னை மந்திரவாதி நெல்லையில் சிக்கியது எப்படி? - TIRUNELVELI NEWS

தங்க செயினை சொம்புக்குள் போட்டால் குழந்தை பிறக்கும் என்று கூறி மோசடி செய்த சென்னை மந்திரவாதி நெல்லையில் சிக்கினார்.

சூர்யா
சூர்யா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2025 at 2:23 PM IST

2 Min Read

சென்னை: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலினி. தம்பதிக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது வீட்டிற்கு ஜோசியம் பார்ப்பதாக கூறி ஒருவர் வந்துள்ளார்.

விசாலினிக்கு ஜோசியம் பார்த்தபோது, அவருக்கு குழந்தை இல்லை என்பதை தெரிந்து கொண்டு ஆறுதலாக பேசுவது போல நடித்துள்ளார். பின்னர், மாந்திரீக பூஜை செய்தால் தோஷம் கழியும். உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்று விசாலினியிடம் அந்த நபர் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக தெரிகிறது.

இதை நம்பிய விசாலினி, 'எவ்வளவு பணம் செலவாகும்?' எனக் கேட்டதற்கு, 'ரூ.35 ஆயிரம் செலவாகும் எனக் கூறியுள்ளார். இதற்கு விசாலினி, அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறியதும், ரூ.5 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். அதுவும் இல்லை என்றதும் ரூ.2 ஆயிரம் கேட்டுள்ளார்.

ஆனால், அந்தப் பணமும் தன்னிடம் இல்லை என விசாலினி கூறியதால், தங்க நகை இருந்தால் கூட போதும்; பூஜை செய்து விடலாம் என மந்திரவாதி கூறியுள்ளார்.

உடனே விசாலினி சற்றும் யோசிக்காமல், 5 சவரன் தங்க நகையை அவரிடம் கொடுத்து பூஜை செய்யுமாறு கூறியுள்ளார். அவரும் 5 சவரன் நகையை சொம்பில் போட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் புளியை வைத்து மாந்திரீகம் செய்வது போல நாடகமாடியுள்ளார். பிறகு, மூடி வைத்த சொம்பை மாலை தான் திறந்து பார்க்க வேண்டும் என, உத்தரவு போட்டுவிட்டு மந்திரவாதி அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் சாமியார் மீது சந்தேகம் அடைந்த விசாலினி, சொம்பை திறந்து பார்த்தபோது 5 சவரன் தங்க நகை அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுதொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிளை கைப்பற்றி, போலீசார் ஆய்வு செய்த போது மந்திரவாதியாக வந்து நகையை திருடிச் சென்றவர் பழைய குற்றவாளி என்பதும், நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா (45) என்பதும் தெரிந்தது. இதையடுத்து, கொளத்தூர் போலீசார் நெல்லை சென்று சூர்யாவை கைது செய்து சென்னைக்கு கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: "யார்ரா அந்த பெண்.. நான் தான் அந்த பெண்" - வியக்க வைக்கும் ஒடிசா 'பாம்பு பெண்'!

விசாரணையில், சூர்யா கடந்த 2024 ஆம் ஆண்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியிலும் இதே போன்ற நகைத் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சித்ரா என்பவரிடம் குடும்பத்தில் தோஷம் கழிப்பதாக கூறி, 5 அரை சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். அது தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சூர்யா மீது தாராபுரம் காவல் நிலையத்தில் இதே போல வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது. கைதான சூர்யாவை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் கொளத்தூர் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.