ETV Bharat / state

'நீதான்யா விஞ்ஞானி'.. குக்கர் விசில் குழப்பத்துக்கு வந்தாச்சு தீர்வு! பதற்றத்திற்கு சொல்லுங்க 'குட் பை'! - COOKER WHISTLE DIGITAL TIMER

சமைக்கும் போது குக்கரின் விசில் சத்தத்தை எண்ண முடியாமல் போவதை தவிர்க்க, ஒவ்வொரு விசில் சத்தத்தையும் கணக்கிடும் டிஜிட்டல் நம்பர் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த அப்துல் ரசாக்.

குக்கரின் விசில் சத்தத்தை டிஜிட்டல் எண்ணிலும் அறியும் வகையில் அசத்தல் கண்டுபிடிப்பு
குக்கரின் விசில் சத்தத்தை டிஜிட்டல் எண்ணிலும் அறியும் வகையில் அசத்தல் கண்டுபிடிப்பு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 6, 2025 at 4:01 PM IST

2 Min Read

- By இரா சிவக்குமார்

மதுரை: 'குக்கர்ல கிழங்க வேக வச்சிருக்கேன்... நாலு விசில் வந்ததும் அடுப்ப மறந்துடாம அணைச்சிருங்க...' இது நமது வீடுகளில் அடிக்கடி கேட்கும் வசனம்... இருந்தாலும், செல்போனில் பேசிக் கொண்டோ அல்லது தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டோ மறந்து விடுவோம். அப்போது வெளியாகும் கோபப் பார்வையில் எதிரே இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது.

ஆனால் இனி கவலைப்பட வேண்டியதில்லை. குக்கரில் சோறு, குழம்பு, காய்கறி, கோழிக்கறி, ஆட்டுக்கறி என எதை வேக வைத்தாலும், விசில் சத்தத்துடன் டிஜிட்டல் டைமரில் அது எத்தனையாவது விசில் என்பதை அறிந்து கொள்ளும் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி அசத்தியுள்ளார் மதுரையைச் சேர்ந்த அப்துல் ரசாக்.

கண்டுபிடிப்பின் பின்னணி

குக்கருடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் டைமர்
குக்கருடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் டைமர் (ETV Bharat Tamil Nadu)

தன் வீட்டிற்கு அருகே தனியார் பள்ளியில் அறிவியல் வழிகாட்டி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அப்துல் ரசாக் இது குறித்து கூறுகையில், "நான் இதுவரை 58 விதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளேன். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் கண்டுபிடிப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளேன். ராணுவம், ரயில்வேக்குத் தேவையான கண்டுபிடிப்புகளோடு, வீடுகளில் சமையல் வேலைப்பளுவைக் குறைக்க சில கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளேன். இதன் தொடர்ச்சியாக தற்போது குக்கர் விசில் சத்தத்தை டிஜிட்டல் முறையில் கவுண்டிங் செய்யும் வகையில் ஒரு கண்டுபிடிப்பை அறிமுகம் செய்துள்ளேன்" என கூறிய அவர் அதன் பின்னணியையும் விவரித்தார்.

எளிய முறையில் தீர்வு

"அண்மையில் எனது வீட்டில் சமையல் நடந்து கொண்டிருந்த போது விசில் சத்தத்தின் எண்ணிக்கையைத் தவற விட்டுவிட்டோம். இதனால் அந்த உணவு வீணாகி விட்டது. ஆகையால் இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணவே இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டேன். இது குறித்து பல்வேறு குக்கர் கடைகளுக்குச் சென்று பார்த்தேன். இது போன்ற முறையை ஒரு சில நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், அதில் சில தொழில்நுட்பக் குறைபாடு உள்ளதை அறிந்தேன். விலையும் அதிகமாக இருந்தது. ஆகையால் மிக எளிய முறையில் இதற்கொரு தீர்வைக் கண்டறிய முனைந்து இந்தக் கண்டுபிடிப்பைச் செய்துள்ளேன்.

'எண்ணிக்கையைக் காட்டிக் கொண்டே செல்லும்'

இதற்கு வெறும் ரூ.200 மட்டுமே செலவானது. இதில் ஒரு ஸ்டாண்டு, அதன் ஊடாக ஒரு குழாய், குக்கரின் உயரத்திற்கு ஏற்றாற்போன்று ஏற்றி இறக்க மற்றும் டைமர் என வடிவமைத்துள்ளேன். விசிலுக்கு நேராக உள்ள நெம்புகோல் எழும் போது, நான் வடிவமைத்துள்ள டைமரில் ஒன்று எனவும், இரண்டாவது விசிலின் போது 2 எனவும் அடுத்தடுத்து தொடர்ந்த விசில் சத்தத்தின் போது எண்ணிக்கையைக் காட்டிக் கொண்டே செல்லும்.

கல்லூரி மாணவி நஃபீசா
கல்லூரி மாணவி நஃபீசா (ETV Bharat Tamil Nadu)

இதன் அடுத்தகட்டமாக டைமர் செட் செய்து விட்டு, குக்கரும், அடுப்பும் தானாகவே அணைந்து விடும் வகையிலான முறையை தற்போது ஆய்வு செய்து வருகிறேன். விரைவில் அதனையும் செய்து விட்டால் மக்களுக்கு பெரும் வரமாய் அமையும் என நம்புகிறேன்" என்றார்.

அப்துல் ரசாக்கின் மனைவி பர்வீன் கூறுகையில், 'என்னுடைய கணவர் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். தற்போது அவர் உருவாக்கியது இந்த டிஜிட்டல் டைமர் முறை உபயோகமாக உள்ளது' என்றார்.

'குக்கருக்கு பாடிகாடா நிற்க தேவையில்லை'

அருகில் உள்ள வீட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவி நஃபீசா கூறுகையில், 'சமைக்கும் போது குக்கரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அம்மா சொல்லும் போது வேறு கவனத்தில் அதனை தவற விட்டு அடியோ, திட்டோ வாங்குவோம். இனி அதற்கான வாய்ப்பில்லை. அதற்காகவே அப்துல் ரசாக், குக்கரோடு இணைக்கப்பட்ட டிஜிட்டல் முறையைக் கண்டுபிடித்துள்ளார். இதில் ஆட்டோமேட்டிக்காகவே அந்த குக்கரில் எத்தனை விசில் வந்தது? என்பதை கண்டு கொள்ளும் வகையில் இது உள்ளது. ஆகையால் இனி குக்கருக்கு பாடிகாடாக காத்திருக்கத் தேவையில்லை. குக்கரில் சாதத்தை வைத்து விட்டு இனி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். மேலும் உங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு இதுபோன்ற குக்கர்களை பரிசாகவே வழங்கலாம்' என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.