ETV Bharat / state

வைகோ தாக்கல் செய்த நியூட்ரினோ ஆய்வு மைய வழக்கு; மத்திய அரசுக்கு கால அவகாசம்! - Neutrino Research center issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 13, 2024, 6:32 PM IST

Updated : Aug 13, 2024, 7:02 PM IST

Neutrino Research Center Issue: நியூட்ரினோ ஆய்வு மைய விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் மனுத் தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வைகோ
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, வைகோ (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கடந்த 2015ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “நியூட்ரினோ திட்டத்துக்காக தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியில் ஆயிரம் மீட்டர் ஆழத்துக்கு சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் தேனி பகுதியில் நில வளம் அழியும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பசுமைத் தொடர்களுக்கு பேரழிவு ஏற்படும். விவசாயம், தண்ணீர், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

மனித உயிர்களுக்கு ஆபத்து நேரிடும். ஆய்வு மையம் அமைய உள்ள பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் முல்லைப் பெரியாறு அணையும், 60 கிலோ மீட்டர் தொலைவில் கேரள மாநிலத்தில் இடுக்கி அணையும் அமைந்துள்ளன. மக்களை பாதிக்கச் செய்யும் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு எப்போதும் தமிழகத்தை தேர்வு செய்கிறது. எனவே, நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. கால அவகாசம் வழங்கி வழக்கை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தேர்தல் வழக்கு; ஆவணங்களில் கையெழுத்திட்டார் ஓ.பன்னீர்செல்வம்! - OPS ELECTION CASE

Last Updated : Aug 13, 2024, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.