மதுரை: இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். இந்திய மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மதுரைக்குக்கு வருகை தந்தார். இந்த நிலையில் மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருந்து 11.45 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தார்.
முன்னதாக கோவில் முன்பாக அமைந்துள்ள மதுரை ஆதினம் மடத்தில் மதுரை ஆதீனம் ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நின்று கொண்டிருந்தார். மதுரை ஆதீனத்தை பார்த்தவுடன் காரில் இருந்து மத்திய அமைச்சர் அமித்ஷா கீழே இறங்கினார்.
அப்போது, அமைச்சர் அமித்ஷாவை மதுரை ஆதீனம் காவி நிற சால்வை அணிவித்து வரவேற்றார். இதன் பின்னர் மதுரை ஆதீனம் சார்பில் வெளியிடப்படும் தமிழாகரன் இதழ், திருஞானசம்பந்தர் புத்தகம் மற்றும் மனு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா நன்றி தெரிவித்துவிட்டு, மீண்டும் கோவிலுக்கு புறப்பட்டார்.
இதையும் படிங்க: நுழைவு தேர்வில் மாநில அளவில் முதலிடம்: பழங்குடியின மாணவன் தேசிய சட்டக்கல்லூரியில் பயில தேர்வு!
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து மதுரை ஆதீனம் கூறும்போது, ''பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்தபோது அவரை சந்தித்து பேசினேன். தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். அவரை கோயில் முன்பாக வரவேற்றது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதையும் படிங்க: ''மசாஜ் செய்துவிட்டு தீர்த்துக்கட்டிய மருத்துவர்'': இளம்பெண் மரணத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்!
மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் மனு ஒன்றை அளித்தேன். அந்த மனுவில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும். கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் சேர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்கவும், மீனவர்கள் பிரச்சனையை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்" என்று மதுரை ஆதீனம் கூறினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.