ETV Bharat / state

குத்தகை ரத்து செய்யப்பட்ட விவகாரம்:மீண்டும் கோர்ட்டுக்கு போன கிண்டி ரேஸ் கிளப் நிர்வாகம்; அரசு பதிலளிக்க உத்தரவு! - RACE CLUB CASE UPDATE

RACE CLUB CASE UPDATE: சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் அளவு நிலத்தின் குத்தகை ரத்து செய்ததை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2024, 10:49 PM IST

சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் கோப்புப்படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கிண்டியில், 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகை பாக்கி சுமார் 731 கோடி ரூபாயை அரசுக்கு செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை ரத்து செய்து தமிழக அரசு செப்டம்பர் 6ம் தேதி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் செப்டம்பர் 24ஆம் தேதி நிலத்தை ஒப்படைக்க கடைசி நாள் என்பதால், இந்த உரிமையியல் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வழங்குவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டீக்காராமன் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை அரசு இன்னும் சுவாதினம் எடுத்துக் கொள்ளவில்லை என்றும், நிலத்தை ஒப்படைக்க 24ஆம் தேதி கடைசி நாள் என்பதாலும், பதில் மனு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: “ரேஸ் கிளப் இடத்தில் குடியிருப்புகள்" - அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் வில்சன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆகியோர், ஏற்கனவே நிலம் சுவாதினம் எடுத்துக் கொள்ளப்பட்டதால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கக் வேண்டும் என வலியுறுத்தினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நிலத்தை அரசு இதுவரை சுவாதினம் எடுக்கவில்லை என்று ரேஸ் கிளப் தரப்பிலும், ஏற்கனவே சுவாதினம் எடுத்துகொள்ளப்பட்டது என்று அரசு தரப்பிலும் கூறப்படுவதை சுட்டிக்காட்டி, உரிமையியல் வழக்காக உடனடியாக விசாரிக்ககோறும் மனுவுக்கு செப்டம்பர் 23ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.