ETV Bharat / state

முதலமைச்சர் தலைமையில் லோக் ஆயுக்தா கூட்டம்! - LOKAYUKTA MEETING 2025

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு என்பது ஒரு ஊழல் தடுப்பு ஆணையமாகும். இது அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது

முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 4, 2025 at 2:43 PM IST

2 Min Read

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று (ஜூன்4) நடைபெற்றது.

ஊழலை ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவிட்டதையடுத்து, தமிழக சட்டப் பேரவையில் லோக் ஆயுக்தா அமைப்புக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முதல்வர், பேரவைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட தெரிவுக் குழு அமைக்கப்பட்டது. அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கவும், தீர்ப்பளிக்கவுமான ஒரு அமைப்பாக செயல்படுகிறது.

இந்த அமைப்பு, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கவும், தீர்ப்பளிக்கவுமான ஒரு அமைப்பாக செயல்படுகிறது. மேலும் இந்த அமைப்பு, ஊழலை ஒழிக்கவும், பொதுமக்களின் நலனை காக்கவும், அரசு ஊழியர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்கும் ஒரு முக்கிய அங்கமாக செயல்படுகிறது. இந்த லோக் ஆயுக்தா அமைப்பின் வரம்பிற்குள், மாநில முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய அனைவரும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

மேலும், குற்ற நிகழ்வு நடைபெற்ற நான்கு ஆண்டுகளுக்குள் பெறப்படும் புகார் மனுக்களை லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். இதில் பெறப்படும் புகார் மனுக்களின் தன்மையையும் குற்றம் சுமத்தப்பட்டப் பொது ஊழியரின் நிலையினையும் பொறுத்து, அந்த புகாரை விசாரிக்க, தனது விசாரணை பிரிவையோ அல்லது மாநிலத்தின் வேறு ஏதாவதொரு விசாரணை அமைப்பினையோ கோருவதற்கு லோக் ஆயுக்தா அமைப்பிற்கு முழு அதிகாரம் கொண்டதாகவும் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீதிபதியாக பேசாமல் கன்னட மொழி பிரதிநிதியாக பேசுவதா? தவாக வேல்முருகன் கொதிப்பு!

தற்போது சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.ராஜமாணிக்கம், லோக் ஆயுக்தா தலைவராக உள்ளனர். இதனைத் தெடர்ந்து, 2 நீதித்துறை உறுப்பினர்கள், 2 நீதித்துறை அல்லாத உறுப்பினர்கள் இருக்க வேண்டும் இவர்களின் பதவி காலம் 5 ஆண்டுகள் என்பதையும் அதில் கூறினர். இதில் ஒரு நீதித்துறை உறுப்பினர்கள் இடம் காலியாக உள்ளது.

இந்த உறுப்பினரை தேர்வு செய்வது தொடர்பான குழுவை அமைப்பது தொடர்பான கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு, லோக் ஆயுக்தா தலைவர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.