தூத்துக்குடி: குருத்தோலை ஞாயிறு பவனியையொட்டி, உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் மற்றும் திரு இருதய ஆலயத்தில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துக்கோண்டு கையில் குருத்தோலைகளை ஏந்தி வழிபாடு செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை பவனி கடைபிடிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக, கோவேறு கழுதை மேல் அமர வைத்து ஜெருசலேம் நகருக்குள் ஓசன்னா பாடலை பாடியவாறு பவனி வந்தார். இந்த நாளை நினைவுகூறும் வகையில், உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் குருத்தோலை திருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள திரு இருதய ஆலயத்தில் ஆயர் ஸ்டீபன் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்திலும் பங்குத்தந்தை ஸ்டார்வின் தலைமையில் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் குரு தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா பாடலை பாடியபடி பவனியாக சென்றனர். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து, கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலம் மற்றும் சிஎஸ்ஐ புனித பவுலின் ஆலயத்தில் குருத்தோலை பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் பவனியில் சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள், நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளுடன் ஓசானா பாடல் பாடியவாறு சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

அதேபோல், தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தின் அங்கம் வகிக்கும், தூய பேட்ரிக்ஸ் இணை பேராலயத்தில் ஆலய குருவானவர் செல்வின் துரை தலைமையில், சபை மக்கள் ஆயிரக்கணக்கானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஆலயத்தை சுற்றி மட்டக்கடை, வடக்கு ராஜா தெரு, நாடார் தெரு, எஸ்.எஸ்.பிள்ளை தெரு போன்ற சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி ஆலயத்திற்கு வந்தனர்.
குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு சிறுவர் முதல் பெரியவர் வரை கைகளில் குருத்தோலைகளை ஏந்திய வண்ணம் இயேசுவின் நாமத்தில் என்ற ஓசன்னா பாடல்கள் பாடி தெருக்களை சுற்றி வந்தது அனைவரையும் கவரும் வண்ணமாக இருந்தது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்