திண்டுக்கல்: கொடைக்கானலில் 62 -ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது மே 24 -ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும் என்றும் இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கோடை விடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக வருடந்தோறும் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று (மே 18) 62 -வது மலர் கண்காட்சிக்கான முன் ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கொடைக்கானல் வந்தார். அதனை தொடர்ந்து கொடைக்கானல் ரோஜா கார்டன் மற்றும் பிரையண்ட் பூங்காவை பார்வையிட்ட அவர் தோட்டக்கலை மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.
அதன் பிறகு கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது பேசிய மாவட்ட ஆட்சியர், '' 62 -ஆவது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவானது மே 24 -ஆம் தேதி தொடங்கி ஒன்பது நாட்கள் நடைபெறும். இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
- ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்வா? தமிழ்நாடு மின்சார வாரியம் சொல்வது இதுதான்!
- பாகிஸ்தான் முகத்திரையை கிழிக்க வெளிநாடு செல்லும் இந்திய எம்.பிக்கள் குழு; முழு விவரம்!
அதே போல கொடைக்கானலில் பெப்பர் அருவி ஆனது புதிய சுற்றுலாத்தலமாக அரசு கட்டுப்பாட்டுடன், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து இயங்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 5-க்கும் மேற்பட்ட அருவிகள் சோதனை செய்யப்பட்டு அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.