ETV Bharat / state

200 ஆண்டுகள் பழமையான செப்புப் பட்டயம்: சேதுபதி மன்னர்கள் குறித்துக் கூறும் வீர வரலாறு என்ன? - KING SETHUPATHI COPPER PLATE FOUND

ஸ்ரீகுமார முத்து விசைய ரகுநாத சேதுபதி ஆட்சியில் காலத்தில் எழுதப்பட்ட சுமார் 200 ஆண்டுகள் பழமையான செப்புப் பட்டயம் ராமநாதபுரம் கடலாடி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செப்புப் பட்டயம்
செப்புப் பட்டயம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 9, 2025 at 3:07 PM IST

2 Min Read

ராமநாதபுரம்: சென்னையை சேர்ந்தவர் ஆதித்யா சம்பத்குமார். இவர் ராமநாதபுரம் கடலாடி பத்திரகாளியம்மன் கோயில் அருகே காந்தி நாடார், பாண்டீஸ்வரி இல்லத்தில் மிகப் பழமை வாய்ந்த செப்புப் பட்டயம் இருப்பதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தொல்லியல் ஆய்வாளர்கள் அந்த இடத்திற்கு சென்று பழமை வாய்ந்த செப்புப் பட்டயத்தை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் இந்த செப்பு பட்டயம் குறித்து பேசிய ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, “600 கிராம் எடையும், 17.5 செ.மீ நீளமும், 30.5 செ.மீ அகலமும் கொண்ட இப்பட்டயத்தில் 52 வரிகள் தமிழிலும், இரு வரிகள் கிரந்த எழுத்தில் சமஸ்கிருதத்திலும் எழுதப்பட்டுள்ளது. கைப்பிடியில் குமரன் துணை என உள்ளது.

செப்புப் பட்டயம்
செப்புப் பட்டயம் (ETV Bharat Tamil Nadu)

ஸ்வஸ்திஸ்ரீ எனத் தொடங்கும் இதில் சக ஆண்டு 1667, கலியுகம் 4846, தமிழ் ஆண்டு குரோதன, வைகாசி 29 என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1745. இதில் மன்னர் பெயர் ஸ்ரீகுமார முத்து விஜய ரகுநாத சேதுபதி என உள்ளது. எனினும், இதன் ஆண்டு சிவகுமார சேதுபதியை குறிக்கிறது. அவர் ஆட்சியில், சேது சமஸ்தானத்தின், பாளையம் கிடாத்திருக்கை நாட்டில், சாயல்குடியிலிருக்கும் குமாரமுத்து விஜய ரகுநாத அய்வாய்ப்புலி பெரிய கறுத்துடையார் சேர்வைகாரர், சேது மார்க்கம் கடலாடியில், விஜய ரெகுநாதப் பேட்டையில், அக்ரஹாரம் ஏற்படுத்தி அதை ஸ்ரீரங்கத்திலிருக்கும் வெங்கிட்டராம அய்யங்காருக்கு பிரதிஷ்டை செய்து கொடுத்து, தனது காணியாட்சியாய் வருகிற காக்கைகுட்டம் என்ற ஊரை கல்லுங் காவேரி புல்லும் பூமியும் உள்ளவரை சர்வ மானியமாக கொடுத்துள்ளார்.

இத் தானத்தை பாதுகாப்பவர்கள் கங்கைக் கரையில் சிவ, விஷ்ணு, பிரம்மா பிரதிஷ்ட்டை, கோடி கன்னியர் தானம், கோதானம், சூரிய, சந்திர கிரகண காலத்தில் பண்ணினால் எந்தப்பலனுண்டோ அதை அனுபவிப்பர். இதற்கு யாராவது தீங்கு செய்தால் கங்கைக் கரையிலே, காராம் பசுவை கொன்ன தோஷத்திலே போவார்கள் எனவும், இதன் சமஸ்கிருதப் பகுதியில் பிறர் கொடுத்ததை பாதுகாத்தால் இரு மடங்கு புண்ணியம். அதை அபகரித்தால் தனது புண்ணியமும் போகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. பரிக்கு நகுலன், கரிக்கு இந்திரன், அனும கேதனன், கருட கேதனன், சிங்க கேதனன் உள்ளிட்ட மன்னரின் 74 விருதுப் பெயர்கள் இதில் உள்ளன. மானியமாக கொடுக்கப்பட்ட காக்கைகுட்டம் கடலாடி அருகிலுள்ளது.

செப்புப் பட்டயத்துடன் குடும்பத்தினர்
செப்புப் பட்டயத்துடன் குடும்பத்தினர் (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: சென்னையில் Boutique நடத்தும் திருநங்கை! சமூக புறக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி சாதித்த ஓவியா!

கி.பி.18ஆம் நூற்றாண்டில் சாயல்குடி அரண்மனையின் தற்போதைய ஜமீன்தாரும் அவர் தந்தையும் விஜய ரகுநாத பெரிய கறுத்துடையார் சேர்வைகாரர் பட்டத்தை பயன்படுத்தும் வழக்கம் உள்ளதாலும், கிடாத்திருக்கை எனும் பெயரில் பாளையம் இருந்தாலும் அதன் ஆளுநர் சாயல்குடியில் இருப்பதாக பட்டயத்தில் கூறப்பட்டுள்ளதாலும் சாயல்குடி ஜமீன்தார் தான் கிடாத்திருக்கை பாளையக்காரர் என அறிய முடிகிறது. நாயக்கர் போல சேதுபதிகளும் தங்கள் நாட்டை பல பாளையங்களாக பிரித்து ஆண்டுள்ளனர். பிராமணருக்கு தானமாக வழங்கப்பட்ட இடம், ஊரை பிறருக்கு விற்கும் போது செப்புப்பட்டயம் நில ஆவணமாக வாங்கியவர்களிடம் வழங்கப்பட்டிருக்கலாம்” என அவர் குறிப்பிட்டார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.