கரூர்: இந்திய ராணுவ வீரரான வெங்கடேசன், தனக்குக் குடியரசுத் தலைவர் அனுப்பி வைத்த பாராட்டு சான்றிதழை குடும்பப் பிரச்சினைகள் காரணமாக மைத்துனர் மற்றும் அவரது மனைவி வாங்கி வைத்துக் கொண்டு தன்னிடம் தராமல் அலைக்கழிப்பதாகக் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் அருகே தெற்கு காந்தி கிராமம் எம்ஜிஆர் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (48). இவர் 1997-ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து 28 வருடங்கள் பணி புரிந்து வருகிறார். இவர், இந்திய ராணுவத்திலிருந்து தேர்வாகி கருப்பு பூனை படை (Black Cat) மூலம் பல தீவிரவாத நடவடிக்கைகளைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தும் பணியில் செயல்பட்டு வருகிறார்.
இவரது சிறப்பான சேவையை பாராட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியக் குடியரசுத் தலைவர் வாழ்த்துரை சான்றிதழை ராணுவ வீரர் வெங்கடேசன் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் ராணுவ வீரர் அவரது சொந்த ஊரில் உள்ள அவரது வீட்டில் அவரது மைத்துனர் ராஜேஷ்கண்ணா மற்றும் மைத்துனரின் மனைவி யுவராணி வசித்து வந்தனர். அப்போது வெங்கடேசன் மற்றும் அவரது மைத்துனர் குடும்பத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்ச்சினையால் வெங்கடேசன் மைத்துனரை வீட்டை காலி செய்ய கூறியதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் ராணுவ வீரரின் குடியரசுத் தலைவர் நற்சான்றிதழ் தபால் மூலம் வந்த நிலையில் குடும்பப் பிரச்சினை காரணமாக ராணுவ வீரரின் குடியரசுத் தலைவர் நற்சான்றிதழை தபால் மூலம் பெற்றும், தனது குடும்பத்தினரிடம் மைத்துனர் குடும்பம் தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாகவும், தற்போது கேட்டால் அலைக்கழிப்பதாகவும் ராணுவ வீரர் வெங்கடேசன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை புகார் அளித்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளரிடம் பேசிய ராணுவ வீரர் வெங்கடேசன் தனது 28 வருடக் கடின உழைப்புக்கு இந்தியாவின் உயரிய விருதான ஜனாதிபதியின் பாராட்டு சான்றிதழ் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நான் NSG கருப்பு பூனை படைப் பிரிவு தேசியப் பாதுகாப்புப் படையில் பணியிலிருந்த காரணத்தினால் தபால் மூலம் அனுப்பப்பட்ட ஜனாதிபதி சான்றிதழ் அனுப்பப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: துக்க வீடாக மாறிய திருமண வீடு... தாய் பலியானது தெரியாமல் நடந்த மகளின் திருமணம்! நெஞ்சை உருக்கும் சோகம் |
ஆனால், அந்த பாராட்டுச் சான்றிதழ் இன்று வரை எனக்குக் கிடைக்கப்படவில்லை. இது குறித்து விசாரித்ததில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி எனது மைத்துனரின் மனைவி யுவராணி கையெழுத்து இட்டு தபாலைப் பெற்றுக் கொண்டு தெரிய வந்தது. இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது குடும்பப் பிரச்சினையைக் காரணமாக வைத்து என்னை அலைக்கழித்து வந்தனர். தற்போது பணியிலிருந்து விடுமுறை கிடைத்துள்ளதால், இது குறித்து இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளேன். இதுகுறித்து தான்தோன்றி மலை காவல்துறை விசாரிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர். எனது 28 வருடக் கடின உழைப்புக்குக் கிடைத்த ஜனாதிபதியின் பாராட்டு சான்றிதழைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களைக் கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்