ETV Bharat / state

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக முடித்த கல்வராயன் இயந்திரம்! - CHENNAI METRO RAIL

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது வழித்தடத்தில் பணியை வெற்றிகரமாக முடித்த கல்வராயன் சுரங்கம் தோண்டும் இயந்திரம், பெரம்பூர் (தெற்கு) நிலையத்தை வந்தடைந்தது.

கல்வராயன் இயந்திரம்
கல்வராயன் இயந்திரம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2025 at 6:38 PM IST

1 Min Read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம், ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.

இந்த திட்டத்தின் 3வது வழித்தடத்தில் மாதவரம் பால்பண்ணை முதல் கெல்லிஸ் வரையிலான முதல் 9 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் TU-01 ஒப்பந்தத்தின் கீழ் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக 7 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

சுரங்கம் தோண்டும் இயந்திரமான கல்வராயன் (S-1331) 3வது வழித்தடத்தில் (upline) அயனாவரம் மெட்ரோ இரயில் நிலையத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கி 867 மீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்துவிட்டு நேற்று (மே 13) பெரம்பூர் நிலையத்தை வந்தடைந்தது.

இதையும் படிங்க: டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு! மத்திய, மாநில அரசுகளுக்கு அதிரடி உத்தரவு!

மிகவும் சிக்கலான சுரங்கப்பாதை பிரிவாக கருதப்படும் அயனாவரம் மற்றும் பெரம்பூர் இடையிலான சுரங்கப்பாதை பிரிவில், சுரங்கம் தோண்டும் இயந்திரம் கல்வராயன் S-1331 பெரம்பூர் ரெயில்வே நிலையத்தின் பாதைகள், நிலையங்களை மற்றும் மக்கள்தொகை அதிகம் உள்ள பகுதிகளைக் கடந்து செல்வது போன்ற பெரும் சவால்களையும், 32-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகளை கடந்து, மக்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் சுரங்கப்பாதை பணியை நிறைவு செய்ததுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர், டாடா ப்ரொஜெக்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.