ETV Bharat / state

பல்கலை. வேந்தர் முதலமைச்சரே! உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து திமுக வழக்கறிஞர் வில்சன் விளக்கம்! - CM WILL BE THE CHANCELLOR

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் வேந்தர் முதலமைச்சர் என்ற நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக திமுக எம்.பி.யும், வழக்கறிஞருமான வில்சன் கூறினார்.

வில்சன் எம்பி பேட்டி
வில்சன் எம்பி பேட்டி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 8, 2025 at 1:10 PM IST

Updated : April 8, 2025 at 1:26 PM IST

2 Min Read

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலமைச்சர் வேந்தராக செயல்படலாம் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக திமுக வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு முறை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.

சட்டவிரோதம்: இந்த வழக்கின் மீது ஏற்கனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விரிவான விசாரணைகள் நடைபெற்று வந்தன. தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று உச்ச நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.

அப்போது, “பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநரிடம் செல்லும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றே பல்வேறு தீர்ப்புகள் கூறுகின்றன. ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200-ஆவது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்படும் மசோதா மாறுபட்டிருந்தால் மட்டுமே ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்க முடியும். 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்,” என்று தீர்ப்பளித்தனர்.

முதலமைச்சரே வேந்தர்: இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், "தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆளுநர் வேந்தராக செயல்படுவதை ரத்து செய்து முதல்வரையே வேந்தராக நியமித்தல், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க: அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - சிலிண்டர் விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரே வேந்தராக செயல்படலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஆளுநர் தரப்பில் மறு ஆய்வு மனு செய்தாலும், அதை எதிர்த்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிடுவோம்.

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் சட்டத்திற்கு எதிராக, அமைச்சரவை முடிவுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆளுநர் முன்பு மூன்று வழிகள் தான் உள்ளன. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்து, மறுபடியும் அதனை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்புவது. இரண்டாவது முறையாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும். பி.கே.பவித்ரா வழக்கில் இதனை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது.

நீட் விலக்கு மசோதா குறித்து வழக்கு: குடியரசு தலைவருக்கு ஒரு மசோதாவை அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அடிப்படை உரிமை பற்றிய மசோதாவாக இருந்தால் மட்டுமே அதனை குடியரசு தலைவர் ஒப்புதல் பெறுவதற்காக ஆளுநர் அனுப்ப வேண்டும். இதே போல நீட் விலக்கு கோரும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் படி தனியாக ஒரு வழக்குப் போடப்படும். வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக சார்பில் நேற்றே வழக்குத் தொடர்ந்து விட்டோம். வரும் திங்கள் கிழமை இதன் மீது விசாரணை நடத்தப்படலாம் என்று கருதுகின்றோம்,"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

Last Updated : April 8, 2025 at 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.