ETV Bharat / state

நிபா வைரஸ் எதிரொலி; தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களுக்கு பறந்த உத்தரவு! - NIPAH VIRUS

நிபா வைரஸ் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில், எல்லையோர மாவட்டங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 8:09 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை : கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் சிலருக்கு அறிகுறிகள் இருப்பதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு உள்ளிட்ட அருகில் உள்ள மாநிலங்களில் நிபா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் மருத்துவ அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களின் சோதனை சாவடிகளில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய ஆறு மாவட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சுகாதாரக் குழுக்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் இளைஞர் உயிரிழப்பு - தடுப்புப் பணிகள் தீவிரம்! - Nipah Virus in kerala

எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் பொது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் தமிழகத்துக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். தொற்று பாதிப்பு இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். தமிழகத்தில் இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிந்தால் அனைத்து விதமான தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.