ETV Bharat / state

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி; இதுவரை 3,814 புகார்கள் வந்துள்ளதாக தகவல்! - chit fund cheating case

மயிலாப்பூர் நிதி நிறுவனம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் மீது இதுவரை 3,814 புகார்கள் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 9:06 PM IST

தேவநாதன் யாதவ், கைது தொடர்பான கோப்புப் படம்
தேவநாதன் யாதவ், கைது தொடர்பான கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட் என்ற நிதி நிறுவனத்தை தேவநாதன் யாதவ் நடத்தி வருகிறார். தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீதம் வரை வட்டி உறுதி என கவர்ச்சியான விளம்பரம் செய்ததை நம்பி, தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரம் பேர் நிரந்தர வைப்பு தொகை திட்டத்தில் முதலீடு செய்தனர்.

மயிலாப்பூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிதி நிறுவனத்திற்கு சென்னையில் மட்டும் 5 கிளைகள் உள்ளன. மேலும், இந்த நிதி நிறுவனத்தில் குறைந்தபட்ச நிரந்தர வைப்பு நிதி ரூ.1 லட்சம் எனவும், அதிகபட்சமாக எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் நிரந்தர வைப்பு நிதியாக செலுத்தலாம்.

செலுத்தும் பணத்திற்கு 8 முதல் 12 சதவீத வட்டி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், அதை நம்பி தமிழ்நாடு முழுவதும் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும், ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலும் ஏராளமானவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வு தொகை மற்றும் வட்டி பணம் முறையாக வழங்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தினமும் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு சென்று பணத்தை கேட்டு முறையிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பலர் இது குறித்து காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவிலும் முறையாக புகார் அளித்துள்ளனர்.

ஆனால் நிதி நிறுவனம் சார்பில், முறையாக பதில் அளிக்காததால் கடந்த ஜூன் மாதம் 6ம் தேதி முதலீட்டாளர்கள் பலர் நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் பிரசாத் என்பவர் அளித்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் 144 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 24.5 கோடி பெற்று ஏமாற்றியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தேவநாதன் யாதவ் மோசடி வழக்கு; மயிலாப்பூர் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்! - DEVANATHAN YADAV CASE UPDATE

இதனை அடுத்து திருச்சியில் வைத்து தேவநாதன் யாதவை கைது செய்தனர். மேலும், இதே மோசடி வழக்கு தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களான குணசீலன், மகிமைநாதன், சுதிர், ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி‌ ரூபாய் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனம், தி நகரில் உள்ள தேவநாதனின் வீடு, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த நபர்களின் வீடுகள் என 12 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் 4 லட்சம் பணம், இரண்டு கார்கள், ஹார்ட் டிஸ்க்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சோதனையின் முடிவில் நிதி நிறுவனத்தை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்து சென்றனர்.

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் மீது 300க்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ள நிலையில் தேவநாதன் பெயரில் உள்ள 5 வங்கிக் கணக்குகளை முடக்கி ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை 27 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தின் பெயரில் உள்ள 18 வங்கி கணக்குகள், தேவநாதனின் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர் குணசீலனின் இரண்டு வங்கி கணக்குகள், ஒளிப்பதிவாளர் மகிமை நாதனின் இரண்டு வங்கி கணக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர்.

இந்த மோசடி விவகாரம் தொடர்பாக மொத்தம் 27 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தேவநாதன் தொடர்புடைய அடையாறு, வண்ணாரப்பேட்டை, சைதாப்பேட்டை, பெரம்பூரில் இயங்கி வந்த நிதி நிறுவன கிளை அலுவலகங்கள், மயிலாப்பூரில் உள்ள 2 கட்டடங்கள் உட்பட 8 கட்டடங்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

இந்நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் அலுவலகத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேவநாதன் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் 3 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்களிடம் புகார் மனுக்களை பெற பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் புகார் மனுக்கள் கொடுக்க முகாம் அமைக்கப்பட்ட நிலையில் தேவநாதன் மீது இதுவரை 3,814 புகார்கள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.