ETV Bharat / state

தேசிய தரவரிசையில் சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்; இயக்குநர் வி.காமகோடி பெருமிதம்! - IIT ranking in NIRF

IIT ranking in NIRF: மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) 2024 தரவரிசையின்படி, ஐஐடி சென்னை, ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6-வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9வது ஆண்டாகவும் முதல் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:42 PM IST

சென்னை ஐஐடி, பேராசிரியர் காமகோடி - கோப்புப்படம்
சென்னை ஐஐடி, பேராசிரியர் காமகோடி - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மத்திய அரசின் என்ஐஆர்எஃப் (NIRF) பட்டியலில் சென்னை ஐஐடி மீண்டும் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. இதுகுறித்து நிரவாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டிலேயே தனது முதன்மையான நிலையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிக்கும் தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் (NIRF) தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 9வது ஆண்டுக்கான என்ஐஆர்எஃப் இந்தியா தரவரிசை முடிவுகளை டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்து பரிசுகளையும் வழங்கினார். இந்தியக் கல்வி வரலாற்றில் இதுவரை கண்டிராத சாதனையாக, ஐஐடி மெட்ராஸ் ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

2016-ல் தரவரிசை வெளியிடத் தொடங்கியது முதல் கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக பொறியியல் பிரிவிலும் முதலிடத்திலேயே நீடித்து வருகிறது. ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த ஐஐடி மெட்ராஸ் தற்போது முதலிடத்திற்கு தரவரிசையில் முன்னேறியுள்ளது.

கண்டுபிடிப்புகள் பிரிவில் (கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசை என்ற பெயரில் இருந்தது) முந்தைய ஆண்டில் இரண்டாம் இடத்திலிருந்து தற்போது முதல் இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. இதற்கான விருதுகளை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி நேரில் பெற்றுக் கொண்டார்" எனக் கூறப்பட்டிருந்தது.

மேலும் அந்த அறிக்கையில், "கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐஐடி மெட்ராஸ் உயர்சிறப்பு கல்வி நிறுவனமாக (Institution of Eminence - IoE) இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. ஐஐடி மெட்ராஸ் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான மைன்ட்குரோவ், இந்தியாவிலேயே முதல்முறையாக வணிகரீதியான உயர்செயல்திறன் கொண்ட 'செக்யூர் ஐஓடி' எனப்படும் RISC-V அடிப்படையிலான 'சிஸ்டம் ஆன் சிப்'பை (SoC) வெற்றிகரமாக வடிவமைத்து, தயாரித்து பயன்பாட்டிற்குத் தயார்படுத்தியுள்ளது.

2023-24ஆம் ஆண்டில் முன்னாள் மாணவர்கள், பெருநிறுவனங்கள், தொழில்துறையினரிடம் இருந்து ரூ.513 கோடி அளவுக்கு இக்கல்வி நிறுவனம் நிதி திரட்டியது. இது முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகத் தொகையாகும். இக்கல்வி நிறுவனத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், நவீன வசதிகளைப் பெறுவதற்கும், பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவும், ஆய்வக ஆராய்ச்சியில் உள்ளவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பயன்படுத்தப்படுகிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விருதுகளை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி நேரில் பெற்றுக் கொண்டார். ஐஐடி மெட்ராஸ் டீன் (திட்டமிடல்) பேராசிரியர் ஆர்.சாரதி, டீன் (ஆசிரியர்) பேராசிரியர் கே.முரளி, பதிவாளர் டாக்டர் ஜேன் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

மாணவர்கள் முதல் ஆசிரியர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வரையிலான அனைவகின் கடின உழைப்புக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது என்று இந்த விருது இதுகுறித்து சென்னை சென்னை ஐஐடியின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

"ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6-வது ஆண்டாகவும், பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9வது ஆண்டாகவும் முதல் இடத்தை பிடித்துள்ளோம். இது உலகத் தரத்திலான திறமைகளை உருவாக்குவதற்கும், தேசிய மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் விதத்திலான எங்களது நிறுவனத்தின் ஆராய்ச்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். கல்வி மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் தேசத்திற்கு மேலும் சேவை செய்வதில் உறுதியாக இருக்கிறோம்." என்று காமகோடி கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வெளியானது தேசிய தரவரிசை பட்டியல்; தொடர்ந்து 6 ஆண்டுகளாக சென்னை ஐஐடி முதலிடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.