ETV Bharat / state

"அதிமுகவினர் காவி உடையில் பேரவைக்கு வராமல் இருந்ததில் மகிழ்ச்சி" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்! - AIADMK MLAS WEARING BLACK SHIRTS

தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று கருப்பு உடை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர்
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 8, 2025 at 2:26 PM IST

3 Min Read

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் காவி உடையில் வராமல் கருப்பு சட்டை அணிந்து அவைக்கு வந்தது அளவு கடந்த மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர், நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி ஏற்கனவே கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளார். அவர் முதலில் பேசி முடிக்கட்டும். அதன் பிறகு உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன்,"என்றார்.

நேரலை செய்ய கோரிக்கை:அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "பிரதான எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் எங்களுக்கு பேச முன்னுரிமை தாருங்கள்,"என்றார்.

அவருக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "நீங்கள் இன்று காலையில் தான் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்தீர்கள். ஆனால், பாமக தரப்பில் நேற்றே விண்ணப்பம் கொடுத்துவிட்டனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது,"என்றார்.

அப்போது குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன், "பிரதான எதிர்க்கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள்,"என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "எதிர்க்கட்சியின் தரப்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது அதனை சட்டப்பேரவை நேரலையில் காண்பிப்பது இல்லை,"என்றார்.

அவருக்கு பதில் அளித்த சபாநாயகர்,"அதிமுகவினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசும்போது நேரலை செய்யாமல் கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பேசுவது மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. படிப்படியாக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படும்,"என்றார்.

இதையும் படிங்க: மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி; உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

சபாநாயகர் அளித்த பதிலில் திருப்தி இல்லை என்று கூறி அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவினர் இன்று கருப்பு சட்டையில் வந்திருக்கிறார்கள். நல்லவேளை அவர்கள் காவி உடையில் வராமல் கருப்பு சட்டையில் வந்தனர். அதற்காக என்னுடைய அளவு கடந்த மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்,"என்றார்.

வாக்குறுதி மீறல்: இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "விஜயபாஸ்கர் காவேரி குண்டாறு குறித்து பேசும்போது சட்டப்பேரவையின் சார்பில் நேரலை செய்யப்படவில்லை. அக்ரி கிருஷ்ண மூர்த்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியபோதும் நேரலை செய்யப்படவில்லை. ஆளும் கட்சி,கூட்டணி கட்சிகள் சார்பில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேச்சப்படும்போது மட்டும் சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படுகிறது.

சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு முதலமைச்சர், அமைச்சர்கள் அளிக்கும் பதிலை மட்டும் நேரலை செய்தால், அதுகுறித்து மக்களுக்கு புரியாது. விவாதம் நடைபெற்றதையும் அதற்கு அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதில் இரண்டையும் நேரலை செய்ய வேண்டும். பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலை செய்யப்படும் என ஆளும் கட்சி கூறியது. ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முதல்வர் நேற்று கடுமையாக பேசியது ஊடகங்களுக்குத் தரப்பட்டது. ஆனால் எதிர்கட்சியினர் பேசுவது குறித்த வீடியோ தரப்படுவதில்லை.

எதிர்க்கட்சியாகக் கூட வராது: முதலமைச்சருக்கு தெம்பு திராணி இருந்தால் எங்களை சட்டப்பேரவையில் பேச அனுமதித்துவிட்டு, அதன் பின்னர் பதில் கூற வேண்டும். ஆனால் நாங்கள் வெளிநடப்பு செய்த பின்னர் எங்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக, எதிர்கட்சியாக உட்காரும் காலம் அதிக தூரம் கொண்டதாக இல்லை. இந்த ஆட்சி முடிவடைய 9 மாதமே உள்ளது. தேர்தலுக்குப் பின்னர் எதிர்கட்சியாக கூட திமுக இடம்பெற முடியாத நிலை ஏற்படும். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு அதிமுக மகத்தான வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்.

திமுகவின் கூட்டணி கட்சிகள் அடிமைப் போல நடத்தப்படுகின்றன. திமுக ஆட்சியில் இல்லாதபோது தமிழகம் வந்த பிரதமருக்கு கருப்பு கொடி காண்பித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால், இப்போது ஆட்சியில் அமர்ந்ததும் வெண்குடை பிடித்தவர்தான் தற்போதைய முதலமைச்சர் மு. க ஸ்டாலின். காவி உடை பற்றிக் கூறி எங்களை முதலமைச்சர் விமர்சிக்கிறார். கடந்த காலத்தில் பாஜக உடன் கூட்டணி வைத்தது திமுகதான்.

எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். ஆனால், தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி திமுக டீசல் விலையை குறைக்கவில்லை. எரிவாயு சிலிண்டருக்கு தலா ரூ.100 மானியம் அளிக்கப்படும் என்று கூறியதையும் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பேச முற்பட்ட தங்களை அவையிலிருந்து வெளியேற்றிவிட்டு, தமிழக முதலமைச்சர் எங்களைப் பற்றி பேசியிருப்பது கோழைத்தனத்தின் உச்சம். அதிமுக உறுப்பினர்கள் அவையில் இல்லாதபோது, எங்களைப் பற்றி சிறுமைப்படுத்தும் விதத்தில் பேசியிருக்கிறார்." என்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.