ETV Bharat / state

"மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள்" - அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவு! - Old Age Home In TamilNadu

High Court Madurai Bench: மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 12:09 PM IST

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (Credits - ETV Bharat Tamil Nadu)

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த அதிசயகுமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டில் திருச்செந்தூர், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, வேளாங்கண்ணி ஆகிய பகுதியில் உள்ள கோயில் வளாகங்கள், பேருந்து நிலையங்களில் ஆதரவற்ற முதியவர்கள் பலர் ஆங்காங்கே நடைமேடை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவின்றி தங்கியுள்ளனர்.

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009-ன் படி, இவர்களை தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்துப் பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வின் கீழ் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "சட்டப்படி மாவட்டத்தில் ஒரு முதியோர் இல்லமாவது அரசால் நடத்தப்பட வேண்டும். ஆனால் ஒரு இல்லம் கூட அரசால் நடத்தப்படவில்லை. தற்போது தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இது விதிமீறும் செயல். ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, அனைத்து மாவட்டங்களிலும் ஒரு முதியோர் இல்லத்தையாவது கட்டுங்கள் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: மதுரை மத்திய சிறை இடமாற்ற விவகாரம்: 6 மாதத்திற்குள் பணியைத் துவங்க ஐகோர்ட் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.