சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூர், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதனையடுத்து KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), சந்தியூர் (சேலம்), மரக்காணம் (விழுப்புரம்) ஆகிய பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும் நெடுங்கல் (கிருஷ்ணகிரி), ஓசூர் (கிருஷ்ணகிரி), பையூர் (கிருஷ்ணகிரி) ஆகிய பகுதிகளில் தலா 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதிகபட்சமாக 40.0° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தி மற்றும் தருமபுரியில் 23.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 1-3° செல்சியஸ் உயர்ந்துள்ளது. ஏனைய தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஜூன் 09) தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (ஜூன் 10) பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் ஜூன் 11ஆம் தேதி வடதமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னையில் இன்று (ஜூன் 09) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (ஜூன் 10) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அரபிக்கடல் பகுதிகள்
இன்று (ஜூன் 9) முதல் ஜூன் 11ஆம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
ஜூன் 12ஆம் தேதி தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கொங்கன்-கோவா-கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு-மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.