சென்னை: விசாரணை கைதிகள் தங்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வது தொடர்பாக அவர்களுக்கு சிறை துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தண்டனை கைதிகளுக்கு விடுப்பு வழங்கவும் சிறை துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் நடத்த சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரகத்துல்லா என்பவரின் தாயார் மரணம் அடைந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி அளிக்கக் கோரி பரக்கத்துல்லாவின் சகோதரி சரிக்காது நிஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு சிறப்பு அமர்வு விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் விசாரணை கைதிகளுக்கு விடுப்பு வழங்க சிறைத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ள நிலையில் மீண்டும் மீண்டும் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை உள்ளதாக சுட்டிக் காட்டினர்.
இதையும் படிங்க: அரசு நிகழ்ச்சியில் திமுக எம்.பி.யின் 'ஆபாச பேச்சு'; பெண் பயனாளிகள் அதிர்ச்சி!
அதே போல் விசாரணை கைதிகளின், தாய், தந்தை, கணவன் அல்லது மனைவி, பிள்ளைகள் போன்ற நெருங்கிய உறவுகள் மரணம் அடைந்தால் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவர்களுக்கு சிறைத் துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'பெண்ணுக்கு மன உளைச்சல்'; பிரபல தனியார் உடல் எடை குறைப்பு மையத்துக்கு ரூ.1.25 லட்சம் அபராதம்!
மேலும் இந்த வழக்கில் தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரக்கத்துல்லாவுக்கு இன்று (ஏப்ரல் 18) முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை அனுமதி அளித்த நீதிபதிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் அவர், அதிகாரிகளின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்து உள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.