திருவள்ளூர்: பொன்னேரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியது. இந்த நிலையில் அவ்வழியாக வந்த அரசு பேருந்து மழை நீரில் சிக்கி பழுதாகியது. இதனால், பேருந்தில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் கடந்த மாதம் முதலே தொடங்கி வாட்டி வந்தது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருந்தனர். இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 16) எதிர்பாராத விதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மேகம் மூட்டமாக இருந்த நிலையில், கனமழை பெய்துள்ளது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்ததன் காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதற்கிடையில், திருஆயற்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பொன்னேரி ரயில்வே சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கியது. இந்த நிலையில், சுரங்கப் பாதை வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று மழை நீரில் சிக்கியது. தண்ணீர் குறைவாக இருப்பதாக ஓட்டுநர் கருதி, மழை நீரில் பேருந்தை இயக்கியுள்ளார். ஆனால், அதிகளவு தேங்கிய மழை நீரின் காரணமாக செல்ல முடியாமல் பேருந்து பழுதாகி சுரங்கப் பாதையிலேயே நின்றுவிட்டது.
இதனையடுத்து, பேருந்தில் பயணம் செய்த பயணிகள், முட்டி அளவு தேங்கிய மழைநீரிலேயே பேருந்தில் இருந்து இறங்கி வெளியில் வந்தனர். இதனால், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து பேருந்தை மீட்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.