ETV Bharat / state

"பஸ் டிக்கெட் எடுக்க பணம் வேண்டாம்.. இது இருந்தால் போதும்"; போக்குவரத்துக் கழகம் சூப்பர் அறிவிப்பு! - TIRUNELVELI GOVERNMENT BUSES

நெல்லை அரசு பேருந்துகளில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பணப்பரிமாற்றம் செய்து பேருந்தில் நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு படம்
கோப்பு படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 15, 2025 at 10:57 PM IST

1 Min Read

திருநெல்வேலி: சென்னை மாநகர பேருந்துகளில் கடந்த பிப்ரவரி மாதம் பயணிகள் வசதிக்காக யுபிஐ மற்றும் கார்டுகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி அமலுக்கு வந்தது. யுபிஐ முறையை பயன்படுத்தி சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய கையடக்க கருவிகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

இதன் காரணமாக பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கு யுபிஐ மற்றும் ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் செலுத்த வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு விரைவு பேருந்துகளில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறும் வசதியை 328 ஏசி பேருந்துகள் உள்பட 1068 பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதே சமயம் விரைவு பேருந்துகளில் ஜி பே, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு, ஃபோன் பே மூலமும் பணத்தை செலுத்தி டிக்கெட் பெறலாம் என்று போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் திருநெல்வேலி மண்டல அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்து பயணிகள் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொது மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நெல்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பயணிகளுக்கு புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக பேருந்தில் டிஜிட்டல் முறையில் பணமில்லா பணப்பரிமாற்றம் செய்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறைபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோர்த்துவிட்ட 'சாட்டை'... கழற்றி விட்ட சீமான்; பரபரப்பை கிளப்பும் பின்னணி!

டிஜிட்டல் முறையில் டெபிட் கார்டை ஸ்வைப் செய்தோ அல்லது கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தோ அல்லது ஜி.பே, ஃபோன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செய்தோ பணப் பரிமாற்றம் செய்து பேருந்தில் நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்து பயணிகள் பயணச்சீட்டு பெற்று பயன்பெற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.'' என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல பொது மேலாளர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.