சென்னை: சென்னை தியாகராய நகர் பகுதியில், காதல் தோல்வி காரணமாக இளம்பெண் 4-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்றார். இதில், சாமார்த்தியமாக செயல்பட்ட போலீசார் இளம் பெண்ணை காபாற்றினர். அவர் தற்கொலைக்கு முயன்ற காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையின் மையப்பகுதியும், எப்போதும் பரபரப்பாக காணப்படும் தியாகராய நகரில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், "தியாகராய நகர் பகுதியில் உள்ள நான்கு மாடிகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 4 ஆவது மாடியில் ஒரு வீட்டில் வசித்து வந்த 27 வயதுடைய இளம்பெண், மாடியில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணிடம் பேசி, தவறான முடிவு எடுக்க வேண்டாம் என்று கூறினர். இன்னொரு புறம் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்,"என்றனர்.
இதையடுத்து அங்கு சென்றை மாம்பலம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் அந்த அடுக்குமாடியில் குடியிருக்கும் நபர்கள் மூலம் அந்த பெண்ணின் மொபைல் எண்ணை வாங்கி அதில் தொடர்பு கொண்டு ஆறுதலாக பேசினர். இதனால், அந்த இளம் பெண் போலீசாரிடம் இயல்பாக பேச ஆரம்பித்தார். அப்போது போலீசார் சிலர் அடுக்கு மாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்குச் சென்று இளம் பெண் வீட்டின் நுழைவு வாயில் கதவை உடைத்துக் கொண்டு, உள்ளே சென்று பால்கனியில் இருந்த அவரை காப்பாற்றினர்.
இதையும் படிங்க: தாங்கல் ஏரி சீரமைப்பு.. 30 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க திட்டம் - சிறப்பு ஏற்பாடுகள் என்ன? |
இதனையடுத்து, அந்த குடியிருப்பில் வசித்து வந்தோரும், போலீசாரும் நிம்மதியடைந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து அந்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், காதலில் திடீரென சிக்கல் எழுந்ததால் தற்கொலைக்கு முயன்றதாகவும் போலீசாரிடம் அந்த இளம பெண் கூறியதாகத் தெரிகிறது. இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், அந்த பெண்ணுக்கு மன நல ஆலோசனை அளிக்கவும் திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகரின் பிசியான பகுதியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் இந்த விஷயத்தில் காவல்துறையினர் சமார்த்தியமாக செயல்பட்டது பாராட்டைப் பெற்றுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது
வாழ்வதற்கு புது நம்பிக்கையைப் பெற தமிழ்நாடு அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-ஐ தொடர்பு கொண்டு பேசலாம். சிநேகா தொண்டு நிறுவனத்தை +91 44 2464 0050, +91 44 2464 0060 எனும் தொலைபேசி எண்கள் மூலமாகவோ, help@snehaindia.org எனும் மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம். டாடா நிறுவனத்தின் 91529 87821 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.