ETV Bharat / state

முருக பக்தர்கள் மாநாடு எதிரொலி: ''அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா?" - ராஜேந்திர பாலாஜி நெத்தியடி பதில்! - KT RAJENTHRA BHALAJI

முருகப் பக்தர்கள் மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்து வீடியோ வெளியானது. இதன் எதிரொலியாக ''அதிமுக - பாஜக கூட்டணி உடைகிறதா?" என்ற கேள்வி எழுந்தது குறித்து ராஜேந்திர பாலாஜி நெத்தியடி பதிலளித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 24, 2025 at 10:56 PM IST

2 Min Read

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்றும் (ஜூன் 24), நாளையும் என இரண்டு நாட்கள் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அமைப்பு ரீதியாக உள்ள 82 மாவட்டங்களில் இன்று காலை சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, ராணிப்பேடை ஆகிய 21 மாவட்டங்களுக்கும் ஆலோசனை கூட்டம் முதற்கட்டமாக நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக மாலை கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், பூத் கமிட்டி அமைப்பு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயல்பாடுகள், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டத்தில் செல்லூர் கே. ராஜு, சி.விஜயபாஸ்கர், கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், அன்வர் ராஜா, கே.சி.கருப்பண்ணன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பிறகு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது,''அண்ணாவின் மீது பாசம் கொண்ட தலைவர் எம்ஜிஆர். அண்ணாவை பற்றி பேசுகிற தகுதி எங்களுக்கு மட்டும்தான் உண்டு. அதிமுக அண்ணாவின் கொள்கைகளை வலியுறுத்தும் இயக்கம். அண்ணாவின் பற்று திமுகவுக்கு கிடையாது.

அதிமுகவுக்கு சுயமரியாதை உண்டு. அதிமுக தலைவர்கள் சுயமரியாதை தலைவர்கள். அதிமுகவை பார்த்து, திமுகவுக்கு பயம் வந்துவிட்டது. முருக பக்தர்கள் மாநாடு தொடர்பாக நடந்த நிகழ்வுகளுக்கு அதிமுக தலைவர்கள் வருத்தம் தெரிவித்துவிட்டோம். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது. திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி பெரியார், அண்ணா. அதன் பரிணாம வளர்ச்சி எம்ஜிஆர்.

திமுக ஒரு நாடக கம்பெனி. அதை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக பாஜக கூட்டணி உடைய வாய்ப்பே இல்லை. இந்த கூட்டணி உறுதியாக உள்ளது. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு என பொதுச்செயலாளர் தெளிவாக கூறிவிட்டார். பாஜக-அதிமுக கூட்டணி என்பது திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் தேர்தலுக்கான கூட்டணி.

கொள்கை வேட்டி மாதிரி. கூட்டணி துண்டு மாதிரி. வேட்டியும் வேண்டும். துண்டும் வேண்டும். வேட்டி மானத்தை காக்க, துண்டு மரியாதையை காக்க வேண்டும். அதிமுக ஆட்சியமைக்க வேண்டும். திமுகவை விரட்ட வேண்டும் என்கிற ஒற்றை பொருளுக்காக, யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார். அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதுதான் எங்கள் முடிவு. இதற்குள் குத்தும் வேலை, குடையும் வேலை எதுவும் வேண்டாம்." என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

''திமுகவின் அடிமை ஆர்.எஸ்.பாரதி எங்களை அடிமை என்று பேச அருகதை இல்லை" - கே.பி.முனுசாமி!

முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி கூட்டணி ஆகிவிட்டதால் ஸ்டாலின் பதட்டத்தில் உள்ளார். திமுகவின் அடிமை ஆர்.எஸ்.பாரதி எங்களுடைய கட்சியை அடிமை என்று பேசுவதற்கு அருகதை இல்லை" என கே.பி.முனுசாமி கூறினார்.

"நடுநிலையான பத்திரிகையாளர் என்றால் என்னை விட்டு விடுங்கள்" - ஆர்.பி.உதயகுமார்!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து தெளிவாக விளக்கமளித்து விட்டேன். முருகன் பக்தனாக மாநாட்டில் கலந்துகொண்டேன். திரும்ப திரும்ப கேட்டால் எப்படி? நடுநிலையான பத்திரிகையாளர் என்றால் என்னை விட்டு விடுங்கள்.

இதையும் படிங்க: "யூதர்களை போல் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று பேசுவதா?" - அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

புரியாத மாணவர்களுக்கு புரிய வைக்க முடியாது. திமுக மக்கள் பணி செய்வதை விடவும், எங்களை விமர்சிப்பதில் தான் நேரம் செலவழித்து வருகிறது. திமுக அச்சத்தில் உள்ளது. திமுக மக்கள் திட்டங்களுக்கு செய்வதை காட்டிலும் சேவை செய்வதை காட்டிலும் தொண்டு செய்வதை காட்டிலும் உழைப்பதை காட்டிலும் அதிமுகவை அவதூறு செய்வதால் திமுகவுக்கு எந்த பலனும் கிடைக்க போவது இல்லை. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல 2026 இல் எடப்பாடி பழனிசாமி முதல்வராவார்." என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.