ETV Bharat / state

மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை மேம்பாலம் - அமைச்சர் எ.வ.வேலு அவையில் தகவல்! - FLYOVER WORK MINISTER VELU ANSWER

சென்னை மாதவரம் ரவுண்டனா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை மேம்பாலம் அமைப்பது குறித்த கேள்விக்கு சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார்.

நெடுச்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு
நெடுச்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 27, 2025 at 8:48 PM IST

1 Min Read

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தி்ன்போது நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வே.வேலு துறை தொடர்பாக எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கேள்வி நேரத்தின் போது வினா எழுப்பிய குளச்சல் தொகுதி எம்எல்ஏ பிரின்ஸ், "கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர்கடை முதல் கருங்கல் வரையுள்ள சாலைகள் விரிவுபடுத்தப்படுமா,"என கேட்டார். அவருக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ. வேலு, "கன்னியாகுமரி மாவட்டம் இரவிபுதூர் கடை முதல் கருங்கல் இடையே 7.6 கிலோ மீட்டர் சாலை உள்ளது.இதில் 5 கிலோ மீட்டர் வரை இருவழி சாலை போடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2.6 கிலோ மீட்டர் சாலையை இருவழி சாலையாக மாற்றும் பணிகள் இந்த நிதி ஆண்டில் தொடங்கப்படும்," என்று கூறினார்.

மேலும் கேள்வி எழுப்பிய எம்எல்ஏ பிரின்ஸ், "கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் - இரணியல் இடையே உள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?," எனக் கேட்டார். அப்போது பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "ஒரு கிலோமீட்டர் பகுதி சாலை நகரப்பகுதியாக உள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடந்த பின்னர் சாலை பணிகள் மேற்கொள்ளப்படும்,"என்று கூறினார்.

இதையும் படிங்க: இபிஎஸ் அமித் ஷாவை சந்தித்தது தவறல்ல; அப்படியே தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வலியுறுத்துங்கள் - ஸ்டாலின்

இதையடுத்து கேள்வி எழுப்பிய பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன், "விக்கிரவாண்டி - கும்பக்கோணம் இடையிலான சாலைப்பணிகள் விரைவாக முடிக்கப்படுமா?,"என கேட்டார். அவருக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு,"ஒப்பந்தம் முடிவடையும் நிலையில் உள்ளது. முடிவடைந்த உடன் பணிகள் தொடங்கப்படும்," என்றார்.

அடுத்ததாக கேள்வி எழுப்பிய எம்எல்ஏ சுதர்சனம், "மாதவரம் ரவுண்டானா முதல் சோழவரம் சுங்கச்சாவடி வரை மேம்பாலம் கட்ட மத்திய அரசால் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ரூ.1900 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், மேம்பாலப்பணி தொடர்பாக மாநில அரசு சில வரிகளை விதித்துள்ளதால், பணி தொடங்காமல் தாமதம் ஆவதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது,"என்றார்.

அவருக்கு பதில் அளித்த அமைச்சர் எ.வ.வேலு, "மத்திய அரசு தமிழ்நாட்டில் பல்வேறு சாலைப் பணிகளுக்கு திட்ட அறிக்கைகள் தயார் செய்து வைத்துள்ளது. ஆனால் ஒன்றன்பின் ஒன்றாகத்தான் பணிகளை முடிக்கின்றனர். நீங்கள் குறிப்பிடும் மேம்பாலப் பணிகள் குறித்து இந்த ஆண்டில் மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்."என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.