வேலூர்: ஜிம் உரிமையாளரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வேலூர் பிரபல ரவுடி உட்பட 5 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த ரசாக் அதே பகுதியில் ஜிம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது ஜிம்முக்கு கடந்த 8ஆம் தேதி ஐந்து பேர் வந்தனர். தாங்கள் வேலூரின் பிரபல ரவுடிகளாக இருக்கின்றோம். எங்களுக்கு ரூ.2 லட்சம் மாமூல் தந்தால்தான் ஜிம் நடத்த முடியும். இல்லையெனில் கொலை செய்யவும் தயங்க மாட்டோம் என்று சொல்லி மிரட்டி இருக்கின்றனர்.
இதையடுத்து தன்னை மிரட்டிய வசூர் ராஜா (45), வெங்கடேசன் (34), கொணவட்டம் மதீனா நகரை சேர்ந்த முனீர் (32), வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஆசிப் (32), காட்பாடி எம்ஜிஆர்நகரை சேர்ந்த மஞ்சுநாதன்(36) ஆகிய 5 பேர் மீது ஜிம் உரிமையாளர் காவல்துறையிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில், வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஜிம் உரிமையாளர் ரசாக்கை ரவுடி வசூர் ராஜா உட்பட 5 பேர் மிரட்டியதன் பேரில் அவர்கள் ஐவரையும் எஸ்.பி தனிப்படை போலீசார் வேலூர் வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையைத் தொடர்ந்து நாங்கள் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டினோம், என்று ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீது மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் ஐவரும் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ‘நீ ஏன் இதை செய்தாய்... அவளிடம் நான் கேட்க வேண்டும்’ - ராஜா ரகுவன்ஷியின் அம்மா உருக்கம்!
மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி வசூர்ராஜா சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அவன் மீது பல்வேறு கொலை, கொலை மிரட்டல் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடி வசூர் ராஜா, கடந்த மாதம் தான் ஒரு வழக்கில் இருந்து விடுதலையாகி பல வழக்குகளில் ஜாமினில் வந்துள்ளார். ஜாமீனில் வந்த நிலையில் மீண்டும் தம் கைவரிசையைக் காட்டி கூட்டாளிகளுடன் சேர்ந்து போலீசாரிடம் சிக்கி உள்ளார். அவர் மீது மேலும் பல வழக்குகளை பதிவு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.