மதுரை: காய்கறி சந்தையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பகுதியில் எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காய்கறி சந்தை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அந்த காய்கறி சந்தையில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் சொந்தமாக தேங்காய் மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். இன்று அந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை நகர் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் கடையில் பரவிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தேங்காய்கள் தீயில் கருகி நாசமாயின. இந்த சம்பவம் குறித்து மதுரை மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் செயல்படத் தொடங்கிய தூத்துக்குடி - மதுரை சுங்கச்சாவடி! உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!
இந்நிலையில், எடை போடும் எலெக்ட்ரிக் தராசுக்கு சார்ஜ் போட்ட போது மின் கசிவு ஏற்பட்டு அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் பொருட்சேதங்களோ, அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. மக்கள் அதிகளவில் நடமாடும் காய்கறி சந்தையில் தீ விபத்து ஏற்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்