ETV Bharat / state

'சென்னைக்கு அடுத்து நாங்க தான் அதிக வரி செலுத்துறோம்'; வானதி Vs அமைச்சர்கள் காரசார வாதம்! - VANATHI SRINIVASAN

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே காரசார வாதம் நடந்தது.

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் (கோப்புப்படம்)
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் (கோப்புப்படம்) (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 9, 2025 at 8:30 PM IST

3 Min Read

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (ஏப்ரல் 9) மானியக் கோரிக்கை விவாதத்தில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பல்வேறு கோரிக்கைகளுடன் கேள்வி எழுப்பி பேசினார்.

வானதி சீனிவாசன் பேசுகையில், கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.1.52 கோடியில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணம் சரியான முறையில் செலவழிக்கப்பட்டதா? கோவை குறிச்சி தொழிற்பேட்டையில் சாலை, குடிநீர், கழிவு நீர் கால்வாய் முறையாக இல்லை எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து அவர், '' கோவையில் செம்மொழி பூங்கா அமைக்கும் தமிழக அரசின் திட்டம் வரவேற்கதக்கது. கோவையில் தங்க நகை தொழில் சிறப்பு பெற்றது. அதற்கு புவிசார்குறியீடு பெற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். கோவை தெற்கு தொகுதியில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் வேண்டும். ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் மார்க்கெட்டை புதுப்பிக்க வேண்டும். தமிழகம் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை தருகிறது. இதில் இருவித பிரச்சனை வருகிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு முறையான தங்குமிடம் இல்லை. நமது மாநில தொழில்வளத்தை பெருக்க அவர்கள் உதவுகின்றனர். அவர்களது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். ஐடிஐ நிறுவனங்களில் முறையான தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறதா? என சந்தேகம் வருகிறது. ஐடிஐ மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி வேகமாக வழங்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கோவி. செழியன், '' நான் முதல்வன் திட்டம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்ற மாணவர்கள், 1 லட்சம் ஊதியம் வரை பணி கிடைக்கப்பெற்றுள்ளார்கள். ரூ.2,877 கோடி நிதியை டாடா நிறுவனம் மூலம் பெற்று தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் 8 மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களே ஐடிஐ-யில் சேர்வர். ஆனால் இப்போது பி.இ, எம்.இ, எம்பிஏ முடித்த மாணவர்களும் அங்கு வந்து தொழிற்பயிற்சி பெறுகின்றனர்'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட பேரவை தலைவர் அப்பாவு, '' நான் முதல்வன் திட்டம் பாலம் போல இருந்து மாணவர்களை உயர்த்துகிறது'' எனக்கூறினார்.'

உடனே வானதி சீனிவாசன், '' பாலம் கட்டுவது தவறல்ல. நல்லா திடமான பாலத்தை கட்ட வேண்டும்'' என்றார்.

அதற்கு அமைச்சர் சிவசங்கர், '' நீங்கள் கட்டிய பாம்பன் பாலம் போல நாங்கள் கட்டும் பாலம் இருக்காது, திராவிட மாடல் பாலம் எப்போதும் உறுதியாக இருக்கும்'' என்றார்.

அதற்கு வானதி சீனிவாசன், '' உலகில் முதல் முறையாக செங்குத்து முறையிலான பாலமாக பாம்பன் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சித்தாந்தத்திற்காக நமது பொறியியல் திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள். வேலை பார்க்கும், படிக்கும் இடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலை கூட சொல்ல முடியாத நிலையில் 90 சதவீத பெண்கள் உள்ளனர். அதனை தடுக்க சீரிய முயற்சி எடுக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு மையம் குறித்த கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்'' என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.கணேசன், ''சாலை, உணவு விடுதி, வணிக நிறுவனம் முதல் வயலில் இறங்கி பயிர் நடுவது போன்ற வேலைகளில் கூட வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். வட மாநிலத்தவர் லட்சக்கணக்கில் இங்கு வர தமிழ்நாட்டு தொழிலாளர் போல நாம் அவர்களை பாவித்து பாதுகாப்பதே காரணம். வெளி மாநில பெண்களும் இங்கு வேலை செய்யும் அளவுக்கு பாதுகாப்பாக உள்ளது'' என்றார்.

தொடர்ந்து வானதி சீனிவாசன், ''கோவை விமான நிலைய விரிவாக்க பணி என்னவானது?'' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமைச்சர் டிஆர்பி ராஜா, ''கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான அனைத்து பணிகளையும் நிதி ஒதுக்கி தமிழக அரசு முடித்து விட்டது. தற்போது விமான நிலைய சுற்றுச்சுவர் கட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டது. இனி மத்திய அரசிடம் வலியுறுத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டும்'' என்றார்.

வானதி சீனிவாசன், '' சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் அதிக வரி செலுத்துவது கொங்கு பகுதி தான். ஆனால் நாங்கள் கொடுத்த வரியில் ஒரு ரூபாயில் எவ்வளவு தொகை எங்களுக்கு திரும்ப வழங்கப்பட்டுள்ளது என நாங்கள் எப்போதும் கேட்டதில்லை. ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வளர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்'' என தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, '' மேற்கு மாவட்டங்கள் செலுத்திய வரியை விட மிக அதிகமான நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு வழங்கி இருக்கிறார். மேற்கு மாவட்டங்களில் பத்தே முக்கால் லட்சம் குடும்ப அட்டைகளில் 4 லட்சத்து 66 ஆயிரம் பெண்களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகையாக ரூ.1000 வழங்கப்படுகிறது'' என பதிலளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு வாட்ஸ் ஆப்
ஈடிவி பாரத் தமிழ் நாடு வாட்ஸ் ஆப் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.