ETV Bharat / state

மோப்ப நாய் படைப்பிரிவில் புதிய சேர்க்கை; காவல்துறைக்கு உதவியாக 11 துப்பறியும் நாய்கள் இணைப்பு! - DETECTIVE DOG PUPPY

புதிதாக வாங்கிய நாய் குட்டிகளுக்கு வெற்றி, விக்ரம், நித்ரா, முகிலன், சிலம்பன், குரளி, காரி, குகன், வென்பா, தீரன், அலெக்ஸாண்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மோப்ப நாய் படைப்பிரிவுக்கு புதிய நாய் குட்டிகளை வழங்கும் நிகழ்வில் சென்னை கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதாரி
மோப்ப நாய் படைப்பிரிவுக்கு புதிய நாய் குட்டிகளை வழங்கும் நிகழ்வில் சென்னை கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதாரி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 10, 2025 at 8:27 AM IST

Updated : June 10, 2025 at 10:42 AM IST

2 Min Read

சென்னை: காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில் உயர்ரக 11 துப்பறியும் நாய் குட்டிகள் சென்னை மோப்ப நாய் படைப்பிரிவில் இணைக்கப்பட்டது.

சென்னை காவல் ஆணையாளர் அருண் தலைமையின் கீழ் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கீழ்ப்பாக்கம் மற்றும் புனித தோமையார் மலையில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, கீழ்பாக்கம் துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் 16 மோப்ப நாய்களும், புனித தோமையார் மலை துப்பறியும் மோப்ப நாய் படைப்பிரிவில் 7 மோப்ப நாய்களும் இருந்து வருகிறது.

சென்னை காவல் ஆணையாளர் அருண் உத்தரவுபடி, புதிதாக 11 மோப்ப நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளது. அதில் லாப்ரடோர் (Labrador) இனத்தை சேர்ந்த இரண்டு மோப்ப நாய் குட்டிகளும், பெல்ஜியம் மாலினாய்ஸ் (Belgium Malinois) இனத்தை சேர்ந்த மூன்று மோப்ப நாய் குட்டிகளும், டாபர்மேன் (Doberman) இனத்தை சேர்ந்த ஒரு மோப்ப நாய் குட்டி என 6 மோப்ப நாய் குட்டிகள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணிக்காக வாங்கப்பட்டுள்ளது.

புதிதாக வாங்கப்பட்ட மோப்ப நாய்களுடன் சென்னை கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதாரி
புதிதாக வாங்கப்பட்ட மோப்ப நாய்களுடன் சென்னை கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதாரி (ETV Bharat Tamil Nadu)

மேலும், 4 மோப்ப நாய் குட்டிகள் போதை பொருட்கள் கண்டுபிடிக்கும் பணிக்கும், ஒரு மோப்ப நாய் குட்டி குற்ற வழக்கை கண்டுபிடிக்கும் பணிக்காவும் புதிதாக வாங்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதாரி எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, லாப்ரடோர், பெல்ஜியம் மாலினாய்ஸ், டாபர்மேன், ஜெர்மன் ஷெப்பர்டு ஆகிய நான்கு இனங்களை சேர்ந்த நாய் குட்டிகள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வாங்கப்பட்ட 11 நாய் குட்டிகளில் 8 ஆண், 3 பெண் குட்டிகள் உள்ளன என்று கூறினார். இதனையடுத்து புதிதாக வாங்கிய நாய் குட்டிகளுக்கு வெற்றி, விக்ரம், நித்ரா, முகிலன், சிலம்பன், குரளி, காரி, குகன், வென்பா, தீரன், அலெக்ஸாண்டர் என்று பெயரிட்டு மோப்ப நாய் பிரிவிற்கு விஜயேந்திர பிதாரி வழங்கினார்.

புதிதாக வாங்கப்பட்ட மோப்ப நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டும் சென்னை கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதாரி
புதிதாக வாங்கப்பட்ட மோப்ப நாய் குட்டிகளுக்கு பெயர் சூட்டும் சென்னை கூடுதல் ஆணையர் விஜயேந்திர பிதாரி (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: அந்த நொடி.. காலத்துக்கும் மறக்காது.. காட்டு யானையிடம் இருந்து நொடி பொழுதில் தப்பிய நபர்!

கடந்த 2024 முதல் இதுவரை 3,657 முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு, 61 குற்ற வழக்குகளில் புலனாய்வுக்கு உதவி புரிந்து வழக்கின் குற்றவாளிகளை கைது செய்ய உதவி புரிந்தும், 137 வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களில் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சோதனை செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தும் என மொத்தம் 3,855 நாசவேலை தடுப்பு சோதனை நிகழ்வுகளில் சீரிய முறையில் மோப்ப நாய் படைபிரிவினர் பணிபுரிந்துள்ளன என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிய நாய் குட்டிகளுக்கு காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் ஆப் சேனல் (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்

Last Updated : June 10, 2025 at 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.