ETV Bharat / state

வக்ஃப் சட்டத் திருத்தத்தை தொடர்ந்து எதிர்ப்போம்: திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா - WAQF ACT

மத்திய அரசின் வக்ஃப் (Waqf ) வாரிய சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிரானது என்பதால் திமுக அதை தொடர்ந்து எதிர்க்கும் என திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா தெரிவித்துள்ளார்.

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற பொதுக்கூட்டம்
வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற பொதுக்கூட்டம் (PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 20, 2025 at 11:36 AM IST

2 Min Read

ஹைதராபாத்: வக்ஃபு வாரிய திருத்தச் சட்ட திருத்தத்தை எதிர்த்து அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (AIMPLB) ஹைதராபாத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நடத்தியது. இந்தியாவில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அதில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திமுகவின் சார்பாக திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம். அப்துல்லா கலந்து கொண்டு புதிய திருத்தத்துக்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்தார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், " வக்ஃப் வாரிய திருத்தச் சட்டம் சிறுபான்மையினர் நலன்களுக்கு எவ்வாறு கேடு விளைவிக்கும் என்பதை சுட்டிக்காட்டி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலுவான எதிர்ப்பையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எவ்வாறு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்" என்பதை விளக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் " இந்த சட்டத்தை எதிர்ப்பதில் தமிழ்நாடு அரசுக்கு உள்ள அக்கறையையும், வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், சிறுபான்மை மக்களுக்கு இந்த சட்டத்தால் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருப்பதாகவும்" அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவர் ஓவைசி, மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தத்துக்கு தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். வக்ஃப் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், வக்ஃப் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை தொடரும் எனவும் ஆவேசமாக கூறினார். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் எப்படி உடைக்கப்பட்டதோ அதை போல இந்த சட்டத்தையும் திருப்பப்பெற வைப்போம் எனவும், இதில் அனைத்து கட்சிகளும் ஒன்றினைந்து செய்ல்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: வக்ஃப் சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணி!

இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருவதை மத்திய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. அதனால், போராட்டத்தை நீர்த்து செய்ய தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். அதற்கு எந்த வகையிலும் அரசியல் கட்சிகள் அடிபணிந்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர் போராட்டம் மூலமே மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திருப்பப் பெறப்பட்டதாகவும், அதனால் ஜனநாயக முறையில் அமைதியான இந்த போராட்டத்தை வெற்றி பெறும் வரைக்கும் தொடர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன் வக்ஃப் சட்டத் திருத்தம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தது. மசோதா தொடர்பான விவாதம் நள்ளரவு வரை நீடித்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி மசோதாவை மத்திய அரசு நிறைவைவேற்றியது. தமிழகத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல்
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் ((ETV Bharat Tamil Nadu))

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.