ETV Bharat / state

மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுக்கும் திமுக - பின்னணி என்ன? - DMK TO REGAIN STATE AUTONOMY

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என 50 ஆண்டுகளாக முழக்கத்தை திமுக அரசு மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. மாநில சுயாட்சியை திமுக அரசு மீண்டும் வலியுறுத்துவது ஏன்?

சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சட்டப் பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 15, 2025 at 9:02 PM IST

4 Min Read

சென்னை: மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என 50 ஆண்டுகளாக முழக்கத்தை திமுக அரசு மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. மாநில சுயாட்சியை திமுக அரசு மீண்டும் வலியுறுத்துவது ஏன்?

உயர்மட்டக் குழு: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவிப்பு வெளியிட்டார். அதில், தொடர்ந்து மாநிலங்களின் உரிமை பறிக்கப்பட்டு வரும் இந்த இக்கட்டான சூழலில், கூட்டாட்சிக் கருத்தியலை வலியுறுத்தும் வகையிலும், ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை, அதற்குரிய கொள்கைகளை மேம்படுத்திடவும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிக்கூறுகள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள் ஆகியவற்றை அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்திடவும் மற்றும் அதற்குரிய நடவடிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும், உயர்மட்ட அளவிலான குழு ஒன்றினை அமைப்பதென்பது மிக, மிக அவசியமாக வந்திருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற மேனாள் நீதியரசர் குரியன் ஜோசப்பை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்களாக, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரும், ஓய்வுபெற்ற I.A.S. அதிகாரியுமான அசோக் வர்தன் ஷெட்டி , தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் மேனாள் துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதனும் இருப்பார்கள் என அறிவித்தார்.

இந்த உயர்நிலைக் குழு, ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்யும்.

குழுவின் ஆய்வு வரம்பு: இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரை செய்யும். மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்யும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும்.

1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக்கூடிய வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும். உயர்நிலைக் குழு தனது இடைக்கால அறிக்கையைப் ஜனவரி மாத இறுதிக்குள்ளும், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டுகளிலும் அரசுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசிடம் குவிந்துள்ள அதிகாரம்: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மாநில சுயாட்சி உயர்நிலைக்குழு குறித்த பல்வேறு கேள்விகளை மூத்த பத்திரிகையாளர் துரை கருணாவிடம் ஈடிவி பாரத் முன்வைத்தது. இதற்கு பதில் அளித்த அவர், "மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அந்தந்த மாநில வளர்ச்சிக்கு மாநில அரசு தான் நிதிகளை ஒதுக்கி திட்டங்களை நடைமுறைப்படுத்தும். பெருபான்மையான மாநிலங்கள் மாநில சுயாட்சி குறித்து வலியுறுத்தி வருகின்றன. 1960-70 களிலேயே திமுக மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்ற கோஷங்களை எழுப்பி இருக்கிறது. கருணாநிதி ஏற்கனவே மாநில சுயாட்சி குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதல், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியவற்றில் மாநில அரசுக்கு தான் முழு அதிகாரம் உள்ளது. மத்திய அரசிடம் அதிகார குவியல்கள் இருந்தால் மாநில அரசுக்கு தேவையான திட்டங்களும், நிதிகளும் கிடைப்பதில்லை என்று மாநில அரசுகள் கருதுகின்றன. பல்வேறு மாநிலங்கள், மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறித்துக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டு சொல்கின்றன. திமுக அரசு இதனை இப்போது தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

ஆட்சியில் இருந்தபோது ஏன் கேட்கவில்லை: நமக்கு என்ன கேள்வி எழுகிறது என்றால்? 50 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது. மீண்டும் இந்த பிரச்னை குறித்து ஆய்வு செய்ய சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், குழு அமைத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். மாநிலத்தின் உரிமைக்காக முதல்வர் உரிமை கோருவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் மத்தியில் காங்கிரஸ், பாஜக என இருகட்சிகளின் ஆட்சியிலும் வெவ்வேறு காலகட்டங்களில் திமுக பங்கேற்று இருந்திருக்கிறது. அந்த காலகட்டங்களில் மாநில சுயாட்சி பிரச்னையை திமுக ஏன் எழுப்பவில்லை? என்ற கேள்வி வருகிறது.

மத்திய அரசுடன் இணக்கம் தேவை: கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசுடன் திமுக அரசு பல்வேறு விஷயங்களில் முரண்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது, மசோதாக்கள் நிறைவேற்றுவது என்ற போராட்ட குணத்தோடு திமுக அரசு செயல்படுகிறது. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை திமுக அரசு கடைபிடிக்கவில்லை. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்க்கு தேவையான நிதியை புதிய திட்டங்களை பெற முடியும். மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை. மாநில அரசின் நிதியில் திட்டங்களை நிறைவேற்றுகிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். மாநில அரசின் நிதி சுமை அதிகரிக்கிறது.

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னெடுப்பு: ஏற்கனவே 1974-ம் ஆண்டு கருணாநிதியால் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு அளித்த அறிக்கைகள் எல்லாம் கிடப்பில் உள்ளன. இணக்காமான சூழல் இருந்த போதே இந்த அறிக்கை கிடப்பில போடப்பட்டது. ஆனால், இப்போது மத்திய அரசுன் முரண்பட்டு நிற்கையில் புதிய குழு அளிக்கும் அறிக்கையை வைத்து சட்டப்பேரவையில் மசோதா அல்லது தீர்மானம் நிறைவேற்றினால் மத்திய அரசு எந்த வகையில் உடன்படும்?

2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் ஆட்சி பிடிக்க வேண்டும் என திமுக முனைப்பு காட்டுகிறது. இத்தகைய சூழலில் மொழி பிரச்னை, மாநில பிரச்னை, மாநில உரிமை நோக்கி முன்னெடுக்கும் போது மக்கள் ஆதரவு கிடைக்கும் என திமுக கருதுகிறது.

அதிமுக ஆட்சி அமைந்தால் என்ன நடக்கும்?: பாஜகவுக்கு எதிரான மனபோக்கு தமிழகத்தில் உள்ளது. அதை வைத்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற அது வாய்ப்பாக இருக்கும் என்று திமுக நினைக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்னை, வரி உயர்வு ஆகியவற்றை திசை திருப்ப மாநில உரிமைகளுக்காக மத்திய அரசை எதிர்த்து திமுக களம் காண்கிறது என்ற பிம்பத்தை ஏற்படுத்தினால் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி சாத்தியம் என நினைக்கிறது.

பாஜக உடன் இணக்கமான சூழல் இருக்கும் போது அதில் எந்த பிரச்னையும் இருக்க வேண்டாம் என நினைத்து முதல்வர் அறிவிப்பின் போது அதிமுக வெளிநடப்பு செய்திருக்கலாம். குழு சமர்பிக்க உள்ள அறிக்கை மத்திய அரசை முழுவதுமாக புறக்கணக்கிற வகையில் இருக்குமா? கல்வியை பொதுபட்டியல் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றுவது என்பது உள்ளிட்ட மாநிலத்தின் அதிகாரங்களைக் கோரி 2 ஆண்டுகள் கழித்து எந்த ஆட்சி இருந்தாலும் அதை முன்னெடுத்து செல்லும்"என்றார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.