சென்னை: மக்கள்தொகை அடிப்படையிலான நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பல்வேறு மாநில கட்சி பிரதிநிதிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் தென் மாநில கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று (மார்ச் 22) நடைபெற உள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை செய்யும்போது, குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் சூழல் உள்ளது. இதனால் தென் மாநிலங்களின் உரிமைகள் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்.
தென் மாநில கூட்டு நடவடிக்கை குழுவுடன் ஆலோசனை:
இந்த நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் 63 கட்சிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, தென் மாநில கூட்டு நடவடிக்கைக் குழு அமைத்து, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க தீர்மானிக்கப்பட்டது.
Honourable Chief Minister of Telangana Thiru @revanth_anumula Avl arrives in Chennai ahead of the crucial JAC meeting against unfair delimitation.
— DMK (@arivalayam) March 21, 2025
Leaders from 14+ parties will unite tomorrow to discuss the pressing issue of delimitation and its impact on state rights.… pic.twitter.com/mhhpbaUH8b
இதனையடுத்து, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, மேற்கு வங்காளம், ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு, தமிழக அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் அடங்கிய குழுவினர், தென் மாநில கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பதற்கான நோக்கம் குறித்த விளக்க கடிதத்தை, நேரில் சென்று அளித்து கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
முதலமைச்சர்களுக்கு அழைப்பு:
அதன்படி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் சீனிவாச ராவ், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான நவீன் பட்நாயக், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோருக்கு அமைச்சர்கள் மற்றும் திமுக எம்பிக்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் - சென்னைக்கு படையெடுத்துள்ள மாநில முதல்வர்கள்! |
இன்றூ நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 20 க்கும் மேற்பட்ட தென் மாநில அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்கள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில் கலந்து கொள்ள வரும் சிறப்பு அழைப்பாளர்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடுகளை குழு அமைத்து திமுக தலைமை தீவிர கதியில் மேற்கொண்டு வருகிறது.
Honourable Chief Minister of Punjab Thiru. @BhagwantMann arrives in Chennai ahead of the crucial JAC meeting against unfair delimitation.
— DMK (@arivalayam) March 21, 2025
Leaders from 14+ parties will unite tomorrow to discuss the pressing issue of delimitation and its impact on state rights.… pic.twitter.com/g2uo33Tw5i
மேலும், கூட்டத்தின் நிறைவாக, தென் மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக இன்று பிற்பகலில் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று நடைபெறவுள்ள கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று இரவே (மார்ச் 20) கேரளா மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் வருகை தந்தார்.
இந்த நிலையில், இன்று (மார்ச் 21) மாலை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப், கேரளா மாநில முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் சென்னை வந்துள்ளனர்.