ETV Bharat / state

வெப்பம் மற்றும் மாசுபாட்டை குறைத்தால் சென்னையை சிறந்த வாழ்விடமாக மாற்றலாம்! ஆய்வறிக்கையில் தகவல்! - CSTEP THESIS ABOUT CHENNAI

வெப்பம் மற்றும் மாசுபாட்டை குறைத்தால் சென்னையை சிறந்த வாழ்விடமாக மாற்றலாம் என்று அறிவியல் கொள்கை ஆய்வு மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்டி கத்திப்பாரா பாலம்
கிண்டி கத்திப்பாரா பாலம் (@chennaicorp X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2025 at 11:18 AM IST

2 Min Read

சென்னை: ''இயற்கை சார் தீர்வுகளை மேம்படுத்துதல்'' என்ற தலைப்பில் அறிவியல், தொழில்நுட்பம், கொள்கை மையம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில், காலநிலை செயல் திட்டங்கள் மற்றும் பசுமை முயற்சிகள் மூலம் வெப்ப அலைகள், சீரற்ற பருவமழை போக்கு, குறுகிய காலத்தில் பெய்யும் அதி தீவீர கனமழை, வெள்ளம் போன்றவற்றை எதிர் கொள்ள கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நீர் உட்புகும் நடைபாதைகள், ஈர நிலங்களை மீட்டெடுத்தல் போன்றவற்றை செயல்படுத்துவதன் மூலம் நகரின் வெள்ள சமாளிப்புத் திறனை கணிசமாக மேம்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வெப்பம் மற்றும் மாசுபாட்டைக் குறைத்து விட்டால் சென்னையை இன்னும் சிறந்த வாழ்விடமாக மாற்றலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பசுமைப் பரப்பை அதிகரிக்கலாம்

வடசென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வார்டுகளில், கான்கிரீட் மேற்பரப்புகளை மாடி தோட்டங்களாக மாற்றினால் உள்ளூர் பசுமைப் பரப்பு 70 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும். பெரும்பாலும் நகரின் அதிக நெரிசலான, வெப்பமான பகுதிகளில் இந்த முயற்சி பெரியளவில் குளிர்ச்சியை ஏற்படுத்தும். வெப்ப நிலையைக் குறைப்பது மட்டுமின்றி, மழைநீர் உறிஞ்சுதலுக்கும், வீடுகளுக்கு விளைபொருட்களை வழங்குவதற்கும் மாடி தோட்டங்கள் உதவும்.

மழை தண்ணீரை உறிஞ்சுவதிலும், வெப்பத்தைக் குறைப்பதிலும் தெருக்கள், நடைபாதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன. வெள்ளம் ஏற்படும் பகுதிகளை, நீர் ஊடுருவக் கூடிய மேற்பரப்புகளாக மாற்றுவதால் மழைநீர் மண்ணில் கசிந்து, நிலத்தடி நீரை மீண்டும் நிரப்பவும், நீர் தேங்குவதைக் குறைக்கவும் உதவும் என்று இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.அதுமட்டுமின்றி மிக அதிக மழை மற்றும் புயல் காலங்களில் அதிகப்படியான வெள்ள நீரை உறிஞ்சி மாசுகளை வடிகட்டும்.

மேலும் ஆய்வில் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே செயலில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, ‘சென்னை நகர்ப்புறத் தோட்டம்’ திட்டம் மூலம் முன்முயற்சியாக பள்ளிகள், வீடுகள் மற்றும் தங்குமிடங்களில் மாடி தோட்டங்கள் மற்றும் நகரும் தோட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை கட்டடங்களை குளிர்விக்கவும், உணவுக்கு தேவையானவற்றை வழங்கவும் மட்டுமின்றி, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கற்றல் வாய்ப்புகளையும் வேலைகளையும் உருவாக்குகின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த அளவே நிலப்பகுதி உள்ள நகரங்களில், கூரைகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது திறமையான நடவடிக்கையாகும்.
இந்த பரிந்துரைக்கப்பட்ட தீர்வுகளை செயல்படுத்த முதலீடுகள் தேவைப்படுகின்றன. நகரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டுகளில் இயற்கை சார் தீர்வுகளை செயல்படுத்த சுமார் ரூ.2,203 கோடி தேவைப்படும் என அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைக் குறைத்தால் ஒவ்வொரு ஆண்டும் ரூ.500 கோடிக்கு மேல் சேமிக்க முடியும் எனவும் அறிக்கை கண்டறிந்துள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.