ETV Bharat / state

அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பது மட்டுமல்ல கூடுதல் தொகுதிகளை பெறுவதும் முக்கியம்! பெ.சண்முகம் பேட்டி! - CPIM P SHANMUGAM

முருக பக்தர்கள் மாநாட்டை பயன்படுத்தி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்

மக்கள் கோரிக்கை நடைபயணத்தைத் தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
மக்கள் கோரிக்கை நடைபயணத்தைத் தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 11, 2025 at 3:00 PM IST

2 Min Read

சென்னை: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின் போது அளித்ததில் 98.5% வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மாநில அரசு செயல்படுத்த வேண்டும், மக்கள் விரோத போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பிராட்வேயில் பிரச்சார இயக்க நடைபயணம் இன்று தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கலந்து கொண்டு பிரச்சார இயக்க நடைபயணத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், திமுக அரசு 2021 தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளில் இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "மதுரையில் ஆன்மீக மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாட்டை நடத்த பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டை பயன்படுத்தி மிகப் பெரிய கலவரத்தை உருவாக்க பாஜக திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 98.5% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக, முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி தொகுதி திமுக எம்பியுமான ஆ.ராசா பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த பெ.சண்முகம், "திமுக அரசு 98.5% தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதனை விரைவில் நிரைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "வரக் கூடிய சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பது தான் எங்கள் முக்கிய நோக்கம் . அவர்களை தோற்கடிக்கும் வலிமை திமுக கூட்டணிக்கு தான் உள்ளது. 2026 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடுதலான இடங்களில் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதனை திமுக தலைமை பரிசீலித்து சுமுகமான முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறோம். அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிப்பது எவ்வளவு முக்கியமானதோ அதே போல், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெறுவதும் எங்களுக்கு முக்கியம்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.