ETV Bharat / state

தமிழ்நாடு அரசு vs ஆளுநர் ரவி: '2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை' நடந்தது இது தான்! - GOVT GOVERNOR CONFLICT CAME TO END

தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என் ரவி இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த சம்பவங்களின் தொகுப்பு வெளியாகியுள்ளது.

ஆளுநர் ஆர்.என் ரவி
ஆளுநர் ஆர்.என் ரவி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 8, 2025 at 10:48 PM IST

4 Min Read

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆர்.என் ரவி பொறுப்பேற்றார். அன்று முதல் இன்று வரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை புரட்டி பார்ப்போம்.

ஜனவரி 2022: தமிழ்நாடு அரசால் தயாரித்து வழங்கப்பட்ட முழு உரையையும் எவ்வித மாற்றமும் செய்யாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முழுவதுமாக படித்து முடித்தார்.

பிப்ரவரி 2022: அகில இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கு (NEET) எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். அப்போது 'இது பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது' என்று ஆளுநர் கூறினார்.

ஏப்ரல் 2022: நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் தமிழ் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.

ஏப்ரல் 2022: தமிழ்நாடு சட்டப்பேரவை 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களை திருத்தி துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது. இந்த மசோதாவையும் ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

அக்டோபர் 2022: கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு தொடர்பாக விமர்சித்ததற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மத்தைப் புகழ்ந்து பேசுவதாக திமுக விமர்சித்தது.

நவம்பர் 2022: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களில் கையெழுத்திடாத ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற கோரி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் திமுக மனு அளித்தது.

ஜனவரி 2023: தமிழ்நாடு என்பதற்கு பதிலாக 'தமிழகம்' என அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டதால் திமுக மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளின் கோபத்துக்கு ஆளானார். இதன் தொடர்ச்சியாக மாநிலத்தில் நடந்த போராட்டங்களின்போது ஆளுநரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

ஜனவரி 2023: தமிழ்நாடு அரசால் தயாரித்து வழங்கப்பட்ட உரையில் மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கர், காமராஜ், சி.என்.அண்ணாதுரை, கலைஞர் உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி படிக்கவில்லை. ஆனாலும் ஆளுநருக்கு அளித்த உரை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதால் ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார்.

ஜனவரி 2023: திமுக எம்.பிக்கள் குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநர் ரவி அரசியலமைப்பை மீறுவதாக கூறி ஒரு மனுவை அளித்தது.

ஏப்ரல் 2023: துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் பங்கை குறைப்பதை நோக்கமாக கொண்ட மாநில பல்கலைக்கழகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களில் திருத்தங்கள் உட்பட 12 முக்கிய மசோதாக்களை தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றியது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 181 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டதாக பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது.

ஏப்ரல் 2023: மாநில சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 20 மசோதாக்கள் மீது விவாதம் நடத்தியதற்காக ஆளுநரை ரவியை திமுக விமர்சித்தது.

ஜூன் 2023: அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வி. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கினார்.

அக்டோபர் 2023: தமிழ்நாடு அரசு மேலும் 5 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக aஅனுப்பி வைத்தது.

அக்டோபர் 2023: அரசியலமைப்பின் 200வது பிரிவின் கீழ் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் ஆளுநர் காலவரையின்றி தாமதப்படுத்தியதை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அக்டோபர் 2024: ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டது. இது ஒரு பெரிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ஆளுநருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட வழிவகுத்தது.

நவம்பர் 2023: ஆளுநர் ரவியின் செயலற்ற தன்மை குறித்து உச்ச நீதிமன்றம் கவலையை வெளிப்படுத்தியது. மேலும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் 2020 ஆம் ஆண்டு முதல் தாமதப்படுத்தியதற்கான விளக்கங்களை கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

நவம்பர் 2023: ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தார். மேலும் 2020 முதல் சமர்ப்பிக்கப்பட்ட 181 மசோதாக்களில் 151 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

நவம்பர் 2023: நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற நவம்பர் 18 அன்று சிறப்பு கூட்டத்தொடரை சபாநாயகர் அப்பாவு கூட்டினார்.

நவம்பர் 2023: அரசியலமைப்பின் பிரிவு 200 இன் படி மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ரவி கடமைப்பட்டவர் என்பதால் தமிழ்நாடு சட்டமன்றம் சிறப்பு கூட்டத்தொடரின் போது 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 2023: தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் இயற்றப்பட்ட மசோதாக்களை இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதலுக்காக ஆளுநர் ரவி அனுப்பி வைத்தார்.

பிப்ரவரி 2024: பிப்ரவரி 112 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றும்போது சில கருத்துகளை தெரிவித்துவிட்டு அமர்ந்தார். இதையடுத்து பேரவைத்தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுமையாக வாசித்தார். தொடர்ந்து, பேரவைத் தலைவர் அவையில் ஆளுநர் உரை குறித்த சில தகவல்களை தெரிவிக்க அவற்றை ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் ஆளுநரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து, ஆளுநர் பேசும்போது, அரசு அளித்த உரையை தவிர்த்து பேசியவற்றை நீக்கும் வகையிலான தீர்மானத்தை முன்மொழிந்தார். துரைமுருகன் பேசிகொண்டிருக்கும்போதே, ஆளுநர் பேரவையை விட்டு வெளியேறி, தேசிய கீதம் இசைக்கப்படும் முன்னதாகவே ராஜ்பவன் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஜனவரி 2025: ஜனவரி 6 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது உரையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

பிப்ரவரி 2025: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இருமொழி கொள்கையை விமர்சித்து தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை பறிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பாக ஆளுநர் ரவி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

மோதலை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்

இந்த பரபரப்பான சூழலில் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்ட சட்டத் திருத்த மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் (Writ) மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதன் மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று ஏப்ரல் (8) தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 'நீட் விலக்கு' அனைத்துக் கட்சிக் கூட்டம்: 'அதிமுக எடுத்த முக்கிய முடிவு' - அதகளப்படுத்திய இபிஎஸ் அறிக்கை!

அதில், ஆளுநர் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200-இல் கீழ் செயல்பட வேண்டும் எனவும், மசோதாக்கள் மீது ஒரு மாதத்திற்குள் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும், மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது எனவும் கூறி, கிடப்பில் போடப்பட்டிருந்த மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.