ETV Bharat / state

267 கிலோ தங்கம் கடத்தல்; சென்னை ஏர்போர்ட் சம்பவத்தில் இரண்டு பேர் மீது காபி போசா சட்டம் பாய்ந்தது..! - Chennai airport smuggling

சென்னை விமான நிலையத்தில் இரண்டு மாதங்களில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில், முக்கிய நபர்கள் இருவர் மீது காபி போசா (cofeposa Act) சட்டம் பாய்ந்தது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 12:41 PM IST

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக துபாய், சார்ஜா, குவைத், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட கடத்தல் தங்கங்கள் பெருமளவு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சுங்கச் சோதனைகள் இல்லாமல் கடத்திச் செல்லப்பட்டன.

இந்த இரண்டு மாதங்களில் ரூ. 167 கோடி மதிப்புடைய 267 கிலோ கடத்தப்பட்ட அனைத்து தங்கங்களும் ஒட்டு மொத்தமாக சுங்கச் சோதனை இல்லாமல் கடத்தல் ஆசாமிகள் வெளியில் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவங்கள் குறிப்பாக டிரான்சிட் பயணிகள் மூலமாகவே நடந்துள்ளன. இந்த நிலையில், இது குறித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையின், ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் துபாயிலிருந்து சென்னை வழியாக இலங்கை செல்லவிருந்த ஒரு இலங்கை பயணியை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். அப்போது அந்தப் பயணி துபாயிலிருந்து கடத்தி வந்த தங்கத்தை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றின் ஊழியர்கள் மூலமாக விமான நிலையத்தை விட்டு வெளியே சுங்கச் சோதனை இல்லாமல் எடுத்துச் செல்ல வைத்துவிட்டு, இலங்கை பயணி மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை செல்ல முயன்றார்.

இதையும் படிங்க: திண்டுக்கல்லில் 17 வயது சிறுமி மீது துப்பாக்கி சூடு.. காதலன் வெறிச்செயல்..! பகீர் பின்னணி..!

ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள் அந்த இலங்கை பயணியை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது, இந்த இலங்கை பயணி போல் மேலும் சில கடத்தல் பயணிகள் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் சென்னை விமான நிலையம் வழியாக சுங்கச் சோதனையில்லாமல் 267 கிலோ கடத்தல் தங்கம் வெளியில் சென்றுள்ளது தெரியவந்தது. அதோடு இந்த கடத்தல் சம்பவங்கள் அனைத்திற்கும் சென்னை விமான நிலையத்தில் பரிசு பொருட்கள் விற்கும் கடையை நடத்தும் யூ டியூபர் சபீர் அலியும், அவருடைய கடையில் பணியாற்றும் 7 ஊழியர்களும் உடந்தை என்று தெரிய வந்தது.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் சபீர் அலி, கடை ஊழியர்கள் 7 பேர், இலங்கை பயணி ஒருவர் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அதோடு மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சபீர் அலி இந்த பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை புதிதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கினார் என்றும் தெரிய வந்தது. இந்த கடையை சபீர் அலி ''வித் வேதாபி ஆர் ஜி'' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் இருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செலுத்தி வாடகைக்கு எடுத்து இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தைச் சேர்ந்தவரும், அதேபோல் இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய கமர்சியல் பிரிவு இணை பொது மேலாளர் ஒருவரிடமும் விசாரணை நடத்தினர். ஆனாலும், இந்த வழக்கில் மேற்கொண்டு யாரும் கைதாகவும் இல்லை கடத்தப்பட்ட 267 கிலோ தங்கத்தில் இன்னும் எதுவும் பறிமுதல் செய்யப்படவும் இல்லை.

இதுகுறித்து சுங்க அதிகாரிகளும், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினரும் இணைந்து தீவிர விசாரணை தொடர்ந்து நடத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் யூ டியூபர் சபீர் அலி, இலங்கை கடத்தல் பயணி, இருவர் மீதும் சுங்கத்துறை அதிகாரிகள் காபி போசா (அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அந்த சட்டத்தில் ஜாமீனில் வெளியில் வர முடியாத படி, சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவர்கள் மீது போடப்பட்டுள்ள காபி போசா வழக்கை அதற்கான கமிட்டி ஆய்வு செய்து உறுதி செய்துவிட்டால் கள்ளக் கடத்தல் மூலம் சேர்த்த சொத்துகளை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் 267 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 பேர்களில் இருவர் காபி போசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், சபீர் அலி கடையில் பணியாற்றி கைது செய்யப்பட்டிருந்த 7 பேர் நீதிமன்றத்தால் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை, அவர்கள் மீதான வழக்குகள் தொடர்ந்து விசாரணையில் இருந்து வருகிறது என்றும் சுங்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், இந்த தங்க கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.