கோயம்புத்தூர்: சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர் வந்த கேரளாவை சேர்ந்த இளைஞரிடம் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து தினமும் சென்னை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு உள்நாட்டு விமானங்களும், ஷார்ஜா, கொழும்பு, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு வெளிநாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்திலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், தங்கம், போதைப் பொருள்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்கும் நோக்கத்திலும் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் பயணிகளின் உடைமைகளும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதில் அவ்வப்போது பயணிகளிடம் கடத்தல் தங்கம், போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும் பல்வேறு நூதன முறைகளில் பயணிகள் சிலர் தங்கம் கடத்தி வருவதும், அதிகாரிகள் சோதனைகளில் பிடிபடுவது வாடிக்கையாக உள்ளது.
அப்படியொரு சம்பவம் தான் கோவை விமான நிலையத்தில் இன்று நிகழ்ந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து கோயம்புத்தூர் வந்த கேரளாவைச் சேர்ந்த பயணி முகமது பாசில் என்பவரிடம் விமான நிலைய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் அவரை சோதனை செய்தனர்.
இதையும் படிங்க: சுவருக்கு பள்ளம் தோண்டிய இடத்தில் 'பாம்'; மண்டையை போட்டு குழப்பிக் கொள்ளும் போலீஸ்!
அப்போது முகமது பாசில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, போதைப்பொருள்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் 25 வயதான அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், கேரளாவிற்கு கஞ்சா கடத்தி செல்வதும் தெரியவந்தது. மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.