சென்னை: புதிதாக மகளிர் உரிமைத் தொகை கோருபவர்கள் வரும் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் திமுக அரசால் தொடங்கப்பட்டு கடந்த 2023 செப்டம்பர் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் 1.14 கோடி பேருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் புதிதாக இணைய இருப்பவர்களுக்கு எப்போது முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய அறிவிப்பை சட்டப்பேரவையில் இன்று வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கோபத்தில் சென்றார்.. சடலமாக வந்தார்..! ஊராட்சி மன்றத் தலைவரின் மனைவிக்கு இப்படியா நடக்கணும்? |
அதில், "தமிழ்நாட்டில் 9,000 இடங்களில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்திற்கான முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மகளிர் உரிமைத் தொகையை பொருத்தவரை ஜூன் மாதம் நான்காம் கட்டமாக புதிதாக இணைய இருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த திட்டத்தில் யார் யாருடைய பெயர் விடுபட்டு இருக்கிறதோ அவர்கள் முறையாக விண்ணப்பித்தால் விரைவில் அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்." என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.