ETV Bharat / state

"கிரிண்டர் செயலியை தடை செய்க" - தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம்! - BAN GRINDR APP

கிரிண்டர் செயலியை தடை செய்ய கோரி பெருநகர சென்னை காவல் ஆணையர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை காவல் ஆணையர் அருண்
சென்னை காவல் ஆணையர் அருண் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 10, 2025 at 3:25 PM IST

1 Min Read

சென்னை: கிரிண்டர் செயலியை பயன்படுத்தி போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், அதனால் அந்த செயலியை உடனடியாக தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் எனவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சென்னை மாநகரில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மாநகர காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தொடர்ச்சியாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதாவது, மாநகர காவல் துறையினரின் இத்தகைய நடவடிக்கையால் கஞ்சா, மெத்தபெட்டமைன் ஹெராயின்,
ஆம்பெட்டமைன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து, அவர்களை சிறையில் அடைத்து வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பாலான நபர்கள் கிரிண்டர் ஆப் (Grindr app) என்ற செயலி மூலமாக பல்வேறு குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Ghibli: ஜிப்லி புகைப்படத்தை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? - சைபர் கிரைம் எச்சரிக்கை!

மேலும் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யும், பத்தில் ஐந்து நபர்கள் இந்த கிரிண்டர் செயலி மூலமாகவே தொடர்ந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கிரிண்டர் செயலி மூலம் போதைப் பொருள் விற்பனை தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், இந்த செயலியை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழ்நாடு அரசுக்கு மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்த கிரைண்டர் செயலி மூலம் அதிக அளவில் போதைப் பொருள் விற்பனை நடைபெறுவதாகவும், அதை தமிழ்நாட்டில் தடை செய்தால் போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க வழி வகுக்கும் எனவும் மாநகர காவல் ஆணையர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.