ETV Bharat / state

சென்னையின் 5 பிரபல ஸ்டார் ஹோட்டல்களின் மதுபானக் கூட லைசன்ஸ் ரத்து! - star hotels bars license cancelled

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 10:22 PM IST

Chennai Corporation: சென்னையில் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் F.L.3 மதுபானக் கூடங்களை தற்காலிகமாக ரத்து செய்தும், உடனடியாக மூடவும் மதுவிலக்குத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - IANS)

சென்னை: இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி. தி பார்க் (Rattha Somerset, Taj Club House, VVA Hotels (Radisson Blu), Hyatt Regency. The Park) ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன. அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்தல், மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்ட விவரங்கள் தெரியவந்தன.

ஆதலால், சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்தும், அந்த மதுபானக்கூடங்களை உடனடியாக மூடவும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கணவனைக் கொன்றதாக வழக்கு; மனைவியின் ஆயுள் தண்டனை ரத்து! - Madras High Court

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.