ETV Bharat / state

நடுக்கடலில் தத்தளித்த சென்னை மீனவர்.. கடலோர காவல் படையால் மீட்பு! - Chennai Fisherman rescued

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 11:02 PM IST

காக்கிநாடா அருகே நடுகடலில் தீக்காயமடைந்த சென்னை மீனவரை இந்திய கடலோர காவல் படையினா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனவர் படகு
மீனவரை கடலோர காவல் படை மீட்ட காட்சி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னையைச் சேர்ந்த மீனவர் நேற்று முன்தினம் சக மீனவர்களுடன் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். இதில், படகில் திடீரென தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து, தீயை அணைக்க போராடியும் பலன் அளிக்கவில்லை.

இதையடுத்து, படகில் மீனவா் ஒருவா் தீ காயமுற்று இருப்பதாக 'வாக்கிடாக்கி' வாயிலாக, கடலோர காவல் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் உள்ள கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், இந்திய கடலோரக் காவல் படை கப்பல்களான சமுத்ரா பஹ்ரேதாா் மற்றும் சி-430 கப்பல் மீட்பு பணிக்கு அனுப்பட்டன.

இதனையடுத்து, காக்கிநாடாவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் நடுகடலில் நின்று கொண்டிருந்த தமிழகத்தைச் சோ்ந்த மீன்பிடி படகின் அருகே சென்றுள்ளனர். அப்போது, அந்த மீன்பிடி படகில் இருந்த மீனவா் ஒருவருக்கு தீக் காயங்கள் ஏற்பட்டிருப்பதும், படகில் இருந்த மற்ற பணியாளா்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் உடனடியாக கப்பலில் சென்று தீக்காயமடைந்த மீனவரையும், மற்ற மீனவர்களையும் இந்திய கடலோர காவல் படையினா்மீட்டு மருத்துவ உதவி அளித்துள்ளனர்.

காயமடைந்த மீனவருக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, கப்பலில் அழைத்து வரப்பட்டனர். அதன்பிறகு, காக்கிநாடாவில் இருந்து C-430 விரைவு கப்பல் மூலம் காக்கிநாடா கடற்கரைக்கு அழைத்து சென்றனா். பின்னா், பாதிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக மேல் சிகிச்சைக்காக காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஒரே சம்பவத்துக்காக சவுக்கு சங்கர் மீது 17 வழக்குகளா? காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி! - Savukku Shankar Case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.