மதுரை: மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் சக ஊழியர் மீது சாட்சியங்கள் அடிப்படையில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த திருப்பதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்திருந்த மனுவில், "மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அலுவல் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகின்றேன். என்னுடன் பணிபுரியும் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக துன்புத்தியாக புகார் என் மீது அளிக்கப்பட்டது, அதன் அடிப்படையில் என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டு 2006 ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆனால் 2019 ஆம் ஆண்டு தான் என் மீது குற்றம் சாட்டப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் விசாரணை அதிகாரியே இந்த வழக்கில் சாட்சியாக உள்ள நிலையில், எதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கைக்கு உத்திரவிட முடியும். எனவே என் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட்ட ஆணையை ரத்து செய்ய வேண்டும்,"என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ஈழத் தமிழ் அகதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு - தலைவர்கள் கருத்து
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிசர், "உள்நிலைக் விசரனை குழுவின் தலைவராக உள்ளவரே. இந்த வழக்கில் ஐந்தாவது சாட்சியாக உள்ளார். எனவே குழுவின் தலைவர், மனுதாரர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது,"என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர், "மனுதாரர் பெண் ஊழியர் மீது தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அதற்கான சாட்சியங்கள் தெளிவாக உள்ளன. எனவே மனுதாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,"என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் தன் உடன் பணி செய்யும் பெண் ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மனுதாரர் கூறும் ஆட்சேபனையை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் விசாரணை அதிகாரி சாட்சியங்களில் அடிப்படையில் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்," என கூறிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.