கோயம்புத்தூர்: கோவை அருகே சாலை ஓரத்தில் நடந்து சென்ற போது அதிவேகமாக வந்த கார் மோதி மூதாட்டி தூக்கி வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சத்தியமங்கலம் சாலையில் உள்ள கோவில்பாளையம், விஐபி கார்டனை சேர்ந்தவர் அழகர்சாமி. அவரது மனைவி சசிகலா (75). இவர்கள் இருவரும் நேற்று காலை 9:00 மணியளவில் கோவில்பாளையம் சத்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதி வேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சசிகலா மீது திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சசிகலா, சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இது தெரியாமல் அக்கம்பக்கத்தினர், அவருடைய உடலை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூதாட்டி சசிகலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அவரது கணவர் கணவர் அழகர்சாமி கதறி அழுதார்.
தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், சசிகலாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : வங்கி கதவுகளை பூட்டாமல் வீட்டுக்குச் சென்ற ஊழியர்கள் - 50 லட்சம் ரூபாய் தப்பியது எப்படி? |
இதனிடையே, சசிகலா மீது கார் மோதிய சிசிடிவி காட்சி இன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில் சசிகலா சாலை ஓரமாக நடந்து செல்வதும், அதி வேகமாக வந்த கார் அவர் மீது மோதுவதும், அதில் அவர் தூக்கி வீசப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்