ETV Bharat / state

திருமாவளவனின் மது ஒழிப்பு மாநாடு மக்களை ஏமாற்றும் செயல் - ஹெச்.ராஜா விமர்சனம்! - bjp h raja

முதலமைச்சரை நேரில் சந்தித்த திருமாவளவன், மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என கேட்டிருக்க வேண்டும் என்று பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2024, 7:48 PM IST

ஹெச்.ராஜா, திருமாவளவன்
ஹெச்.ராஜா, திருமாவளவன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கோவையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். பின்னர், கோவை பாஜக அலுவலுகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து எச்.ராஜா பேட்டியளித்துள்ளார்.

ஹெச் ராஜா பேட்டி (Video Credits - ETV Bharat Tamilnadu)

அப்போது பேசிய அவர், “ பிரதமர் மோடி அரசு பொறுப்பு ஏற்று முதல் 100 நாளில், ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் கிராமங்களை இணைக்கின்ற சாலைகளை உருவாக்க பணிகள் தொடங்கியுள்ளது. முத்ரா வங்கி கடன் 10 லட்சம் 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் 5 இலட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

விஸ்வகர்மா திட்டம் : தமிழக பாஜகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. உழைக்கும் மக்கள் அதிகளவில் பாஜகவில் சேர விருப்பம் தெரிவிக்கிறார்கள். விஸ்வகர்மா திட்டம் அறிவித்து பிற மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறோம். ஆனால் தமிழ்நாட்டில் கண்டு கொள்வதில்லை.

விசிக மது ஒழிப்பு மாநாடு: நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 ஆம் தேதி மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் சொல்லவில்லை. இதனால், திருமாவளவன் மாநாடு மக்களை ஏமாற்றும் செயல். இன்று மாநில அரசு 500 கடைகளை மூடியுள்ளது என கூறியுள்ளது. ஆனால், 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள். இது அனைத்து விதத்திலும் மக்களை ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த திருமாவளவன்.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய முக்கிய தகவல் என்ன?

நடிகர் விஜய் வாழ்த்து: தவெக தலைவர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லவில்லை என நாம் கேள்வி எழுப்பினோம். முதல் பிரதமருக்கு வாழ்த்து சொன்னார். பின்னர் பெரியாருக்கு வாழ்த்து சொன்னார் என்பது தேவையற்றது. காலை எழுந்தவுடன் வாழ்த்து சொன்னாரா? அதன் பின்னர் வாழ்த்து சொன்னாரா? என்பது தேவை இல்லை.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நான் காலாவாதியாகிவிட்டேன் என கூறியிருக்கிறார். அவர் என்னைவிட 15 வயது மூத்தவர். எனக்கு 67 வயதாகிறது. அவர் மகன் இறந்ததால் தற்போது சட்டமன்ற உறுப்பினராகியுள்ளார். அவர் இதுபோன்று பேசினால் அரசியலில் இருந்து காலாவதியாகி விடுவார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.