ETV Bharat / state

மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்கும் அமித் ஷா... உச்சகட்ட பாதுகாப்பில் மதுரை மாநகரம்! - AMIT SHAH MADURAI VISIT

அமித் ஷா சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா
மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு வெளியே வரும் மத்திய அமைச்சர் அமித் ஷா (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 8, 2025 at 12:36 PM IST

1 Min Read

மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில் உள்துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா காலை 11 .15 மணியளவில் உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

இதற்காக காலை 11 மணியளவில் சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கு விடுதியில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புறப்படும் உள்துறை அமைச்சர் மீனாட்சி அம்மன் கோவிலில் 11.15 மணி முதல் 12 மணி வரை சாமி தரிசனம் செய்கிறார்.

கோவிலில் நடைபெறும் மத்திய கால பூஜையில் கலந்து கொள்ளும் உள்துறை அமைச்சர் சாமி தரிசனம் செய்யும்போது பக்தர்கள் கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உள்துறை அமைச்சர் மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தர உள்ள நிலையில் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாசி வீதிகள் தொடங்கி சித்திரை வீதிகள் வரையிலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊடக உலகின் கலங்கரை விளக்கம்... தொலைநோக்கு பார்வை புரட்சியாளர் ஸ்ரீ ராமோஜி ராவ்!

கோவில் அருகே உள்ள உயரமான கட்டிடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிலை சுற்றிலும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் அமித்ஷா ஓய்வெடுப்பதற்காக தற்காலிக ஓய்வுறையும், தீயணைப்பு நிலைய வாகனங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் காலை 11 மணி வரை அனுமதிக்கப்படும் பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலை 12 மணி வரை சாமி தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சிந்தாமணி பகுதியில் உள்ள தங்கு விடுதிக்கு உள்துறை அமைச்சர் புறப்பட்டு சென்றவுடன் அங்கு தொழிலதிபர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு கார்டு
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனல் இணைப்பு கார்டு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.